LOADING

Type to search

கனடா அரசியல்

ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்த்தானமும் ஶ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரியும் இணைந்து நடத்திய ‘தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டம்’

Share

கனடா- ஸ்காபுறோ நகரில் இயங்கிவரும் ஶ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்த்தானமும் ஶ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரியும் இணைந்து நடத்திய ‘தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டம்’ கடந்த 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10.00 மணி தொடக்கம் கனடா கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஶ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்த்தானம் மற்றும் ஶ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரி ஆகியவற்றின் நிறுவனரும் பிரதம சிவாச்சாரியாருமான சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் அவர்களின் வழி நடத்தலில் சக சிவாச்சாரியப் பெருமக்கள் மற்றும் கல்லூரியின் நிர்வாகிகள் மற்றும் அதிபர் ஆசிரியைகள் ஆகியோர் இணைந்து விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

விழாவில் தொடர்ச்சியாக எவ்வித தாமதமும் இன்றி மேடையேறிய முத்தமிழின் அடையாளமாக விளங்கிய கூறுகளான இயல், இசை, நாடகம் ஆகியவை நம் தமிழர் பாண்பாட்டையும் கலை இலக்கியத்தையும் மரபு சார்ந்த விடயங்களையும் இணைத்து நம் மொழியின் மேன்மையினையும் சிறப்பையும் எடுத்தியம்பின என்றால் மிகையாகாகாது.

நிகழ்ச்சிகள் மிகுந்த நேர்த்தியாக ஒழுங்கு படுத்தப்பெற்ற நகர்ந்து சென்ற வேளை அவற்றை சிறப்பாகத் தொகுத்து வழங்கிய ஶ்ரீமதி மது நந்தினி தயானந்த சர்மா அவர்களின் பொறுமையுடனான பங்களிப்பைப் பாராட்ட வேண்டும்.

மேலும், நமது மாணவச் செல்வங்களை தேர்ந்தெடுத்து பயிற்றுவித்து மேடையேற்றிய பின்னரும் அவர்களோடு சமாந்தரமாகப் பயணித்த அனைத்து ஆசிரியப் பெருந்தகைகளையும் பாராட்டியாக வேண்டும். அழைக்கப்பெற்ற பல விருந்தினர்கள் தங்கள் சிறப்பான உரைகளை ஆற்றிச் சென்றனர்.

படங்கள்:- சத்தியன்-