LOADING

Type to search

கனடா அரசியல்

“தமிழ்ப் பண்பாட்டின் முழுமையான காவலராக எம்மத்தியில் திகழ்ந்தவர் கவிநாயகர் கந்தவனம் ஐயா அவர்கள்”

Share

கனடாவில் இயங்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் சார்பாக இயக்கத்தின் செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம் தெரிவிப்பு

தற்போது எமது தமிழினம், உலகப் பந்தின் அனைத்து தளத்திலும் பரந்து விரிந்து செழிப்புடன் வாழ்ந்து வருகின்றது. இவ்வாறான மேன்மையுறு நிலையில் எமது தமிழ்ப் பண்பாட்டையும் காவிச் செல்லும் பொறுப்பு அனைவரிடத்திலும் உண்டு. எம்மத்தியில் வாழும் அல்லது வாழ்ந்த பல தமிழ் அறிஞர்கள் இந்தப் பொறுப்பை தங்கள் ‘தலை மேல்’ காவிச் சென்றார்கள். அவர்களில், நேற்றைய தினம் எம்மை விட்டு மறைந்த கவிநாயகர் கந்தவனம் ஐயா அவர்கள் திகழ்ந்தார்கள். கனடாவில் முப்பத்தைந்து வருடங்களுக்கு மேல் வாழ்ந்து தமிழ்ப் பண்பாட்டின் முழுமையான உருவமாகத் திகழ்ந்து மறைந்தவர் கவிநாயகர் கந்தவனம் ஐயா அவர்கள். வெறுமனே தோற்றத்தில் மாத்திரம் அல்லாது. அறிவு சார்ந்த வகையில் எமது பண்பாட்டைக் காத்த ஒரு காவலராகத் திகழ்ந்தவர் இவர்.

அவருக்கு எமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் எமது அஞ்சலியைத் தெரிவிக்கின்றோம்.’

இவ்வாறு கனடாவில் தமையகத்தைக் கொண்டு இயங்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் சார்பாக இயக்கத்தின் செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம் அனுப்பி வைத்துள்ள அஞ்சலிக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ‘ மறைந்த கவிநாயகர் கந்தவனம் ஐயா அவர்கள் எமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பத்துக்கு மேற்பட்ட மேடையில் தனது ஆற்றலையும் தமிழ் மொழியின் மீதும் தமிழ் இலக்கியத்தின் மீதும்.தமிழ்ப் பண்பாட்டின் மீதும் கொண்ட தனது பற்றையும் பாசத்தையும் வெளிக்காட்டியவர்கள். சந்தக் கவியரங்குகள் மூலம் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் எமது தாயத்தின் தமிழ் உணர்வாளர்களை தட்டி எழுப்பியவர். அவரது இழப்பு எமக்கு தனிப்பட்ட ரீதியிலும் தமிழ்ப் பண்பாட்டுத் தளத்திலும் பாரிய வெடிப்பைத் தந்துள்ளது என்றால் அது மிகையானது அல்ல!.

இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் சார்பாக இயக்கத்தின் செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம்தெரிவித்துள்ளார்