LOADING

Type to search

இலங்கை அரசியல்

சிறைச்சாலை வாழ்க்கை இல்லை என்றால் ‘ஈஸ்ரர்படுகொலை இனமத நல்லிணக்க அறிதலும் புரிதலும்’ என்ற இந்த புத்தகம் எழுத வாய்ப்பே இருந்திருக்க முடியாது

Share

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் ‘பிள்ளையான்’ சி..சந்திரகாந்தன் தெரிவிப்பு

( கனகராசா சரவணன்)

கிழக்கு மாகாணம் எல்லோருடைய மாகாணமாக இருக்க வேண்டுமாக இருந்தால் யாரும் தாங்கள் பெரிது என தங்களை மார்தட்டக் கூடாது எந்த மதமும் தங்களை உயர்திபிடிக்க கூடாது அது பௌத்தமாக இருக்கலாம் முஸ்லீமாக இருக்கலாம் அதனை நாங்கள் எதிர்ப்போம். இந்த குண்டு வெடிப்பின் பின்னால் உள்ள சக்தி என்ன அவர்களுடைய நோக்கம் கொள்கை என்ன என்பதை இந்த புத்தகம் இலகுவாக காட்டியுள்ளது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சி..சந்திரகாந்தன் தெரிவித்தார்

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் எழுதிய ஈஸ்ரர்படுகொலை இனமத நல்லிணக்க அறிதலும் புரிதலும் எனும் வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழா 23-03-2024 சனிக்கிழமை (23) அஞ்சனா மண்டபத்தில் இடம்பெற்றது. மேற்படி ‘ஈஸ்ரர்படுகொலை இனமத நல்லிணக்க அறிதலும் புரிதலும்’ நூலை ‘பிள்ளையான்’ சி. சந்திரகாந்தன் வெளியீடு செய்துவைத்து உரையற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.

“சிறைச்சாலை வாழ்க்கை இல்லை என்றால் இந்த புத்தகம் எழுத வாய்ப்பே இருந்திருக்க முடியாது சிறைச்சாலையில் இடம்பெற்ற கலந்துரையாடல் சந்திப்புக்கள் மிக பயங்கரமான மனிதர்களோடு மிக நண்பனாக உரையாட கிடைத்த பாக்கியம் எல்லாம் இறைவன் கொடுத்;தது அதில் தகவல் திரட்டுவதற்கு பல வழிகளிலே சிறைச்சாலை அதிகாரி சம்மாந்துறையைச் சேர்ந்த அரபு மொழி சம்மந்தமாக புலமை கொண்ட மௌலவி.

அதேபோன்று சிறையில் இருந்த ஸாரானின் தம்பி சைனி மெனியுடடைய மனைவியின் கடைசிதம்பி இப்போது சிறையில் இருக்கின்ற நவ்பர் மௌலவி கூட உரையாடி இந்த புத்தகத்தில் குரான் வசனங்களை பெற்றுக் கொண்டேன். இவ்வாறு நீண்ட வரலாற்றின் தொகுப்பில் ஒரு இஸ்லாமிய மகனும் எங்களை குற்றம் கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக கவனமாக எழுதப்பட்டது

பேர்பிரகடனம் செய்து கையை உயத்தி கோட்பாடுகள் என தௌவ்பீக் கொள்கை களை வஹாபீசத்தை பேசி வழிநடாத்துகின்றவர்கள் தான் இந்த புத்தகத்தை படித்து எங்களுக்கு எதிராக பேர் கொடி தூக்குவார்கள் அவர்கள் நாட்டில் மீண்டும் ஒரு இரத்தகலரியை ஏற்படுத்த வேண்டும் என சிந்திப்பவர்களாகத்தன் இருக்கும் .

புதுவருட தினம் மட்டு ஆண்டகை பொன்னையா வருவார் அங்கு கரோல் இடம்பெறும் அதில் கனிசமான அளவு முஸ்ஸீம் இளைஞர்கள் கலந்து கொள்வார்கள் அப்படி ஒரு தினமான ஈஸ்ரர் தினத்தில் குண்டு வெடிப்பு இடம்பெற்றது

நாம் தெரிந்தே தெரியாமலே ஒரு பேர் பிரகடனத்துக்கு மத்தியில்; இருக்கின்றோம் இந்த பேர் பிரகடனத்தை நாங்கள் வலிந்து எடுக்கவில்லை இன்னும் ஒரு மதம் அந்த மதத்தில் இருக்கும் முறை மையமாக கொண்டு எங்களது பகுதியிலே வாஹாபீச கொள்கை உருவாகி இந்த நாட்டையும் உலகத்தையும் குலுக்கியது

இதை எப்படி எதிர்காலத்தில் கையாளப்போகின்றோம் இந்த இரத்த கலரியை போலு இன்னும் ஒரு இரத்த கலரியை தடுப்பதற்கு உரிய நிலமையில் இருந்து எப்படி ஒரு அமைதியான சூழலை தொடர்ந்து தக்கவைப்பது இந்த சவாலை எப்படி எதிர் கொள்வது என சிந்திக்காமல் இருக்க முடியாது அந்த வலி வேதனையை சொல்லியிருக்கின்றோம்

இந்த கடும் போக்குவாதிகள் எப்படி உருவாகின்றார்கள் உருவாக்கப்படுகின்றனர் என தேடிபார்க்கவேண்டும் சனல் 4 வீடியோ காட்சியை வைத்து சில அரசியல்வாதிகள் என் மீது கைநீட்டி காட்டினர் நான் விடுதலை போராட்ட காலத்தில் தமிழ் சிங்கள உறவில் நீணடகாலமாக பாதிக்கப்பட்ட அரசியல் பாடம் சந்தித்தனவன் நான் அந்த காலத்தில் மிகப் பெரும் தாக்குதல் நடாத்த எத்தனை ஆண்டுள் சென்றது

சாதாரன ஒரு மதக் குழுவில் இருக்கின்றவர்கள் பெரும்பான்மை குழுவில் இருந்தால் எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கு தான் இந்த புத்தகம் பதில் சொல்லியிருக்கின்றது எப்படி மெல்ல மெல்ல எமது மண்ணில் மாற்றம் இடம்பெற்றிருக்கின்றது என அறியவேண்டும் இந்த மண்ணிலே சாதாரணமாக தமிழ் அரசியல் கட்சிகள் போல வெறுமனவே சாதாரணமான சிந்தனை கொண்டவர்களாக இருக்க முடியாது ஒரு ஆழமான கருத்தாடலையும் அறிவு சாந்த திட்டமிடுபவர் களாக இருக்கவேண்டும்

சிறைச்சாலைக்குள் இருந்து கொண்ட இவர்கள் தமது உடைகளை கழுவுவதற்கு (சீமெந்து பாக்) மாட்டுதாள் பாக்கில் அரபு எழுத்தில் எழுதி அதனை திருப்பி வைத்து அதற்குள் உடைகளை வைத்து வெளியே அனுப்புவார்கள் அதில் அரபி எழுத்தில் என்ன தவல் கொடுத்து அனுப்புகின்றார்கள் என தெரியாது அதனை பார்க்க கூடிய அறிவு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இருக்கவில்லை இன்று கூட அந்த நிலமை அப்படித்தான் இருக்கமுடியும்.

எனவே எங்கள் மண்ணிலே எங்களுக்கு முன்னால் குழந்தைகள் எரிந்து போனார்கள் இப்படி ஒரு சம்பவம் இன்னும் ஒரு முறை நடக்க கூடாது என அரசு சிந்திக்க வேண்டும்;.

இந்திய எல்லைப் புறத்தில் ஜ.எஸ்.ஜ.எஸ் தலைவரை நேற்று இந்தியா கைது செய்தது ரஷ;யாவில்; துப்பாகி சூடு நடக்கபோவதாக அமெரிக்க உளவு பிரிவு அறிவித்தது அதனை ரஷ;;ய எமது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபோல கணக்கு எடுக்வில்லை எனவே எல்லோரும் ஒன்றுபட்டு சிந்தித்தால் மட்டும் தான் இந்த பேர்பிரகடனத்தையும் சவால்களையும் வெல்ல முடியம். ;

காத்தான்குடியில் வஹாபிச கருத்துக்களில் இருக்கின்ற பள்ளிவாசல் எத்தனை; சூபிக்கள் என்றால் யார். சியா சுனிமுஸ்லீம்கள் என்றால் என்ன அங்கு இருக்கின்ற அது போன்று ஏனைய மதப்பிரிவுகள் தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த உயிரை பயணமாக கொடுத்தவர்கள் எல்லோரும் மிக வசதி படைத்தவர்கள் இந்த வீடியோவில் காட்டப்பட்ட பலர் வசதி படைத்தவர்கள் அவர்களுடைய கம்பனி வாகரையிலே ஒரு பண்ணைக்காக பதியப்பட்டுள்ளது இதே கம்பனி தான் ஸரானை ஜப்பானுக்கு அழைத்து சென்றது அவருக்கு பித்தளையை வாங்கி கொடுத்திருக்கின்றது

மில்கானை சவுதிக்கு பொலிஸ் பாயிஸ் அழைத்து கொண்டு சென்று விட்டுவந்துள்ளார் ஓட்டு மாவடியில் இருக்கின்ற மௌலவி சிறைச்சாலைக்கு தொழுகைக்காக அதிக பணத்தை கொடுத்துவபவரின் தந்தையாக இவர் பள்ளிவாசலால் அதிக உதவி செய்கின்ற பேர்வையில் அவர் அங்கு சந்திக்க இடம்பெற வாய்ப்பு இருக்கின்றது எங்கள் நாட்டு புலனாய்வு பிரிவு பலவீனப்பட்டு போயுள்ளது அரசியல் சூழல் காரணமாக நடவடிக்கை எடுப்பதற்கு பேசுவதற்கு எல்லோரும் அச்சப்படுகின்றனர்

7ம் 8ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கருப்பொருளான மதமாற்றம் 5000 ஆயிரம் வருடமான இந்த மண்ணின் பாரம்பெரியமான இந்த மாற்றத்தை தீர்மானிக்கின்ற அளவிற்கு சென்றிருக்கின்றது என்றால் அந்த பிழையை யார் ஏற்றுக் கொள்வது 1922 ம் ஆண்டு தொடக்கம் ஈழகனவுகளில் நான்கள் மிதக்க 1938 எண்ணை கலாச்சரம் சவூதியில் ஏற்பட்ட மாறுதல் அது வளர்சியடைந்த அந்த அரபு தேச கலாச்சாரத்தை 1990 ம் ஆணடு குழந்தைகளுக்கு ஊட்டப்படுகின்றது 1980 புத்தளத்தில் சரியா சட்டம் அச்சிடப்பட்டிருக்கின்றது சரியா சட்ட கல்லூரி இங்குவந்து அமைக்கப்பட்டிருக்கின்றது என சொன்னால் இதை கண்டும் காணாமல் போன சமூகம் யார் என சொன்னால் குண்டு வெடித்ததன் பின்னர் அதை பேச நாங்கள் அருகதை இல்லை என பேசுவோமாக இருந்தால் இதையார் பேசுவது எமது பிள்ளைகள் மரணிக்கும் வரை காத்திருக்க போகின்றோமா ?

ஒரு நாட்டின் பலம் கருவில் பிள்ளை சாகாமல் தடுப்பது பிறக்கும் பிள்ளை ஆரோக்கியமாக பிறப்பது பிறந்த பின்னர் தாயும் சிசுவும் பாதுகாப்பாக வாழ்வது ஆனால் வாஹபிச கொள்கை இஸ்லாமுக்கு எதிரான காபீர்கள்;களை கண்ட இடத்தில் பிரடியை வெட்டுங்கள் என்று சொன்னால் நேற்று இறந்து போன குழந்தைகள் மாத்திரம் தான் குழந்தைகளா?. எமது குழந்தைகளுக்கு வரும்வரை காத்திருக்க போகின்றோமா இன்னுமொருமுறை வராலமல் தடுக்க வேண்டும்” என்றார்.