LOADING

Type to search

இலங்கை அரசியல்

தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சி – ஜேவிபி தமிழர் மக்களின் பிரதிநிதி சந்திரசேகரன் குற்றச்சாட்டு

Share

தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சி எடுத்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

26-03-2024 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே இராமலிங்கம் சந்திரசேகர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைக்கு அனைத்து கருத்து கணிப்புக்களிலும் தேசிய மக்கள் சக்தியே வெற்றிபெறும் என கூறப்படுகின்றது, இதனால்
தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுப்பதற்கு இவர்கள் முயற்சி எடுத்து வருகின்றார்கள்.

கடந்த 76 வருட ஆட்சியாளர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ளுகின்றோம், அவர்களுடைய சகாப்தம் முடிவுக்கு வர போகின்றது, எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் புதிய அரசாங்கம் புதிய ஜனாதிபதி தெரிவு இடம்பெறும் என்பதை தெரிவித்துக்கொள்ளுகின்றேன் என தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் கனடாவில் சில நாட்களுக்கு முன்னர் தமது கட்சியின் தலைவர் அநுரகுமார கலந்து கொண்ட மாபெரும் கூட்டத்தில் ஏராளமான தமிழ் பேசும் மக்களும் கலந்து கொண்டமை, தமிழ் மக்களின் ஆதரவு ஜேவிபி கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கும் உண்டு என்பதைக் காட்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்

அத்தோடு முன்னாள் ஜனாதிபதி மைத்திறிபால சிறிசேன தெரிவித்த ஈஸ்ரர் குண்டு தாக்குதல் தொடர்பிலும் இராமலிங்கம் சந்திரசேகர் கருத்து தெரிவித்தார்.