உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க செயற்பாட்டாளர் கனடா வாழ் வீ.எஸ். துரைராஜா தொடர்பான ‘ஒரு சமூக சிற்பியின் பட்டறிவு பகிர்வு’ நூலின் அறிமுக விழா கொழும்பில் நடைபெற்றது
Share
கொழும்பு கலை, இலக்கிய, ஊடக நண்பர்கள் வட்டம் இணைந்து ஏற்பாடு செய்த முன்னாள் கனடா தமிழ்க் கல்லூரி தலைவரும், சத்தியப்பிரமாண ஆணையாளருமான ‘சமூக சிற்பி’ வீ.எஸ். துரைராஜா அவர்களின் ‘ஒரு சமூக சிற்பியின் பட்டறிவு பகிர்வு’ என்ற நூலின் அறிமுக விழா கொழும்புத் தமிழ் சங்க விநோதன் மண்டபத்தில் ஞானம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் ‘சாகித்ய ரத்னா’ மருத்துவர் தி.ஞானசேகரன் தலைமையில் இன்று (02.04.2024) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கனடா வாழ் வீ. எஸ். துரைராஜா அவர்கள் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தீவிரமான செயற்பாட்டாளர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
விழாவில் முக்கிய அழைப்பாளராக மூத்த அரசியல்வாதி திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்கள்
கலந்து கொண்டதுடன், அவரைப் பற்றி திரு. வீ.எஸ். துரைராஜா அவர்கள் குறிப்பிடும்போது‘சங்கரி’ அண்ணன் என அன்போடு அழைத்தார்.
கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலய மாணவி செல்வி. சத்திகா சிறிகுமரனின் தமிழ் வாழ்த்துடன் ஆரம்பமானது. இந்நிகழ்வில் திருமதி. லீலாவதி மோகனசுந்தரம் வரவேற்புரை நிகழ்த்தினார். வாழ்த்துரைகளை கொழும்புத் தமிழ் சங்கத் துணைத் தலைவர் திரு. த. அரியரத்தினம், சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி. சுகந்தி இராஜகுலேந்திரா ஆகியோர் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் தினகரன், தினகரன் வார மஞ்சரி பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர் மற்றும் முனைவர் சிவலிங்கம் சதீஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பு செய்தனர்.
நூலாசிரியர் அறிமுகத்தை சமூக சேவையாளர் திரு. ஆராக்கியம் பிரான்சிஸ் நிகழ்த்த, நூல் அறிமுகத்தை சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி. உமாச்சந்திரா பிராகாஷ் வழங்கினார்.
நூல் வெளியீட்டில் முதற் பிரதியை புரவலர் ஹாசீம் உமர் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து ஊடகவிலாயர் கே.பொன்னுத்துரையின் நன்றியுரையும், நூலாசிரியர் ‘சமூக சிற்பி’ வீ.எஸ். துரைராஜா அவர்களின் ஏற்புரையும் இடம்பெற்றது