விழுப்புரம் அருகே தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சுக் காற்று – 17 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Share
விழுப்புரம் அருகே மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுக் காற்றால் 17 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாந்தி, மயக்கம், மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் அருகே உள்ள வேடம்பட்டு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வேடம்பட்டு, நன்னாடு ஊராட்சியில் வசித்து வரும் பொதுமக்கள், பல்வேறு தொற்று நோய்களால்
பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவ சுத்திகரிப்பு ஆலையை மூட நடவடிக்கை எடுக்க கோரி வேடம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் ஆலையை மூட மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததாக கூறி வேடம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் நாடாளுமன்ற தேர்தலை முழுவதுமாக புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த நிலையில் அந்த ஆலையில் இருந்து வெளியேறிய நச்சு காற்றால் வேடம்பட்டு கிராமத்தை சேர்ந்த 17 பேர் வாந்தி, மயக்கம், மூச்சு திணறல் ஏற்பட்டு
பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.