LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழக வீரர் குகேஷூக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

Share

‘கேண்டிடேட்ஸ்’ செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக இளம் வீரர் குகேஷூக்கு (வயது 17) பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த வெற்றியின் மூலம் உலக செஸ் சாம்பியன் தொடரில் சீனாவின் டிங் லிரெனுடன் குகேஷ் மோத உள்ளார்.

   முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘கேண்டிடேட்ஸ்’ செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக இளம் வீரர் குகேஷூக்கு வாழ்த்துகள். வெறும் 17 வயதில், குகேஷ் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன் தொடரில் சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.