LOADING

Type to search

இந்திய அரசியல்

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்

Share

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மதியம் 1:10 மணியளவில் தேரோட்டம் நிறைவடைந்தது. மதுரை சித்திரை திருவிழா, மீனாட்சி அம்மன் கோவிலில், கடந்த 12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் பத்தாம் நாளான நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. இரவு சுந்தரேஸ்வரர் வெள்ளி யானை வாகனத்திலும், மீனாட்சி பூப்பல்லக்கிலும் பவனி வந்தனர். இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மீனாட்சி ஒரு தேரிலும், சுந்தரேஸ்வரர் – பிரியாவிடை மற்றொரு தேரிலும், மாசி வீதிகளில் பவனி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து, வழிபாடு நடத்தினர்.