LOADING

Type to search

இந்திய அரசியல்

“கோவையில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைக்க முடியாது!” – உயர்நீதிமன்றம் உத்தரவு!

Share

கோவை மக்களவை தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்த்த சுதந்திர கண்ணன் என்பவர் வெளிநாட்டில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.  இதையடுத்து, கடந்த 19 ம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக கோவைக்கு வந்துள்ளார். அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை என்பதால் அவரையும் அவரின் மனைவியையும் வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ளார்.

புகார் அளித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி வழக்கு தொடர்ந்தார். இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஜி.சந்திரசேகரன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையம் தரப்பில், கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதாகவும், மனுதாரர் கோவை தொகுதில் வசிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போதே மனுதாரரின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளிட்ட போது மனுதாரர் ஏன் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை என வினவிய நீதிபதிகள், தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்து விட்ட நிலையில், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.