LOADING

Type to search

இந்திய அரசியல்

பாபா ராம்தேவ் விசாரணைக்கு ஆஜராக விலக்கு அளித்த உச்சநீதிமன்றம்

Share

பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்பட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்துவருகிறது. கடந்த மாதம் பதஞ்சலி நிறுவனம் மீது தவறான விளம்பரங்கள் வெளியிடுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக்கூடாது என எச்சரித்த உச்சநீதிமன்றம் பதிலளிக்க கோரி அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து நோட்டீசுக்கு பதிலளிக்காததால் அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவை நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகினர். நாளிதழ்களில் பகிரங்க மன்னிப்பு கேட்ட அசல் பக்கத்தை பதிவு செய்யுமாறு அவர்களது வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து அடுத்த விசாரணையின்போது பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராவதில் இருந்து நீதிபதிகள் விலக்கு அளித்தனர்.