LOADING

Type to search

இலங்கை அரசியல் உலக அரசியல்

”உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தோடு தன்னை இதயசுத்தியோடு இணைத்துப் பயணித்தவர் அண்ணல் ஈழவேந்தன் அவர்கள்”

Share

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தி

உலகெங்கும் பரந்து வாழும் எமது தமிழ் பேசும் உறவுகள் மத்தியில் ஒரு நேர்மையான அரசியல்வாதியாகவும் தமிழ்ப் பற்றும் மன உறுதியும் கொண்டவராகவும் அச்சம் தவிர்த்து வெளிப்படையாக தனது கருத்துக்களை பொது மேடைகளில் பகிர்ந்து கொள்ளும் துணிச்சல் கொண்டவராகவும் விளங்கிய ஈழவேந்தன் ஐயா அவர்கள் கனடாவில் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தோம். அவரது கடந்த கால செய்ற்பாடுகள் அனைத்தும். தமிழ்ப் பற்றும் தமிழ்த் தேசிய உணர்வும் கொண்டவர்களால் நன்கு கவனிக்கப்பெற்று. அனைவராலும் நேசிக்கப்பெற்றவராக விளங்கினார்.

அத்துடன், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தோடும் தன்னை இதயசுத்தியோடு இணைத்துப் பயணித்தவர் அண்ணல் ஈழவேந்தன் அவர்கள். உலகில் பல நாடுகளில் நடைபெற்ற இயக்கத்தின் மாநாடுகளில் எவ்வித சோர்வும் இன்றி உற்சாகமாகக் கலந்து கொண்டு பயனுள்ள உரைகளை ஆற்றி உலகத் தமிழ் அறிஞர்களின் பாராட்டுக்களைப் பெற்றவர் ஈழவேந்தன் ஐயா என்றால் அது மிகையாகாது”

இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

அவரது அறிக்கை பின்வருமாறு தொடர்கின்றது

“இலங்கைப் பாராளுமன்றத்தில் மிகவும் ஆணித்தரமாக தனது கருத்துக்களைப் பகிர்நந்து கொண்ட அவரை அவரது சக தமிழ் அரசியல் சகாக்கள் கூடஒதுக்கி வைத்திருந்தது உலகத் தமிழர்களுக்கு மனவேதனையைத் தந்த ஒரு விடயமாக விமர்சிக்கப்பட்டு வந்தது. எனினும் தனது உறுதியான கொள்கைகளை எந்த இடத்தில் முன்வைத்து உரையாற்றுவதை அவர் தொடர்ச்சியாக கடைப்பிடித்து வந்தார்.

பின்னர் தமிழ்நாட்டில் தங்கியிருந்து எமது மக்கள் நலன் சார்ந்த அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடு காட்டிய அவரை தமிழகத்தில் தொடர்ந்து தங்கியிருக்க விடாமல், இந்திய உளவுத்துறை அவரை நாடுகடத்தியது. தொடர்ந்து கனடாவிற்கு பயணித்த அவர் அங்கும் நிம்மதியற்ற வாழ்க்கையையே மேற்கொண்டார். இவ்வாறான இக்கட்டானை நிலையிலும் மனம் தளராது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினராகச் செயற்பட்டு கனடிய தேசிய அரசியல்வாதிகள் மத்தியில் எமது தாயக மக்கள் தொடர்பாகவும் இலங்கையில் 2009 வரை இடம்பெற்றது. இனப்படுகொலையே என்பதை அழுத்திச் சொல்லிக் கொண்டிருந்த அவரது உதடும் நாக்கும் தற்போது அடங்கிவிட்டன.

அன்னாரது இழப்பு தமிழ் மக்களின் இருப்பிற்கு ஒரு சவாலாகவே அமைந்து விட்டது. எனவே தன்னலன் பாராது எமது மக்களுக்காக உழைத்த ஈழவேந்தன் ஐயாவின் இழப்பை எமது இனத்தின் இழப்பாக எண்ணி அவரது இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நாம் திரண்டு சென்று கலந்து கொள்ள வேண்டும்”

இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது