LOADING

Type to search

இந்திய அரசியல்

இரண்டாம் உலகப்போரின்போது தாய்லாந்தில் உயிர்நீத்த தமிழர்கள் நினைவாக ‘நடுகல்’ திறப்பு

Share

இரண்டாம் உலகப்போரின்போது தாய்லாந்து சயாம் – பர்மா இரயில்பாதைக் கட்டுமானப் பணியில் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சொந்தங்களின் நினைவைப் போற்றும் ‘நடுகல் விழா’ தாய்லாந்து தமிழ்ச் சங்கம் மற்றும் மலேசியத் தமிழர்களின் ஏற்பாட்டில்இன்று (மே 1) நடைபெற்றது. தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் அமைச்சர் சிவசங்கர், புதுக்கோட்டை அப்துல்லா எம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழா பற்றி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-

“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்

சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல் என்பது தொல்காப்பிய நூற்பா!

நீத்தாரை நடுகல் வைத்து நினைவேந்துவது தமிழரான நமது மரபு!

இரண்டாம் உலகப்போரின்போது சயாம் – பர்மா இரயில்பாதைக் கட்டுமானப் பணியில் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சொந்தங்களின் நினைவைப் போற்றும் ‘நடுகல் விழா’ தாய்லாந்து தமிழ்ச் சங்கம் மற்றும் மலேசியத் தமிழர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.

தமிழ்நாடு அரசின் சார்பில் இதற்கென 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சர் சிவசங்கர், புதுக்கோட்டை அப்துல்லா எம்.பி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

போரில் உயிர்நீத்தோர் மட்டுமல்ல, கடும் கொடுமைகளுக்கு உள்ளாகி, உழைப்பாக உயிரையே ஈந்து மடிந்த இந்தத் தமிழர்களும் நாம் போற்றி வணங்கத்தக்க வீரர்கள்தான்! அவர்களின் நினைவை வரலாற்றில் பதிக்கவே தாய்லாந்து தமிழர்களுடன் இணைந்து தமிழ்நாடு அரசின் இந்த நடுகல் முயற்சி.”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.