“பிரதமர் மோடி, ‘பலாத்கார குற்றவாளி’க்கு ஓட்டு கேட்கிறார்!” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
Share
பிரதமர் மோடி, மத சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்துக் கொண்டு ‘பலாத்கார குற்றவாளி’க்கு ஓட்டு கேட்கிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் இரண்டாவது கட்டமாக நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதனிடையே தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணா பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆபாச காணொளிகள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்தது. இந்நிலையில், பிரஜ்வால் ரேவண்ணா விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் விமர்சன பர்திவொன்றை வெளியிட்டுள்ளார்.
ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி, ‘பலாத்கார குற்றவாளி’க்கு ஓட்டு கேட்கிறார். பிரஜ்வல் ரேவண்ணா நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அவர்களை ஆபாச காணொளிகள் எடுத்தவர். ஆனால், நரேந்திர மோடி அந்த கற்பழிப்பாளியை ஆதரித்து, பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு வாக்களித்தால் அது எனக்கு உதவியாக இருக்கும் என மேடையில் ஓட்டு கேட்கிறார். இதன் வாயிலாக, நாட்டின் அனைத்து பெண்களையும் அவமதித்துள்ள நரேந்திர மோடி, நாட்டு பெண்களிடம் கைகூப்பி தலைகுனிந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.