மொன்றியால் மாநகரில் சிறப்பாக நடைபெற்ற TamilBee விளம்பர வலைத்தளத்தின் இரவு விருந்து 2024
Share
மொன்றியலில் TamilBee விளம்பர வலைத்தளத்தின் விழா கடந்த சனிக்கிழமை 27 ஏப்பிரல் 2024 அன்று மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பெற்று இறுதிவரை எவ்வித தடங்கலோ தாமதமோ இன்றி நடைபெற்றது. TamilBee (தமிழ் தேனீ) என்பது மொன்றியல், ரொரோன்ரோ பெருநகரங்களில் வர்த்தக நிறுவனங்கள், பொது அமைப்புக்களின் விபரங்கள், நிகழ்வுகள் மற்றும் சலுகைகள் என்பவற்றை தொகுத்து தரும் வலைத்தளமும் அலைபேசி செயலியும் ஆகும். இந்த செயலி மக்களின் ஆதரவைப் பெற்று பல இடங்களிலும் பேசப்படும் விடயமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த TamilBee இரவின் சிறப்பு விருந்த்தினர்களாக உதயன் பத்திரிகை பிரதம ஆசிரியர் லோகன் லோகேந்திரலிங்கம் அவர்களும் ரொரோன்ரோ வர்த்தக பெருமகன் கனி அவர்களும் மொன்றியல் வர்த்தகர் முத்தையா ராசகோபால் அவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். சிறப்புரை வழங்கிய திரு லோகேந்திரலிங்கம் அவர்கள் TamilBee உரிமையாளர் செல்லையா மூர்த்தி அவர்களின் சேவையை பாராட்டியதோடு வியாபாரங்கள் வளர ஊடகங்களினதும் விளம்பரங்களினதும் உதவி தேவை என்பதை சுட்டி காட்டி புதிதாக ஒரு சமூகமோ அன்றி ஒரு இனமோ ஒரு நகரத்தில் குடியேறினால் அது வர்த்தகத்தில் காலூன்ற வேண்டும் என்றார் . ஆரம்ப உரை நிகழ்த்திய கனி அவர்கள் இன்றைய இளைய சமுதாயத்திற்கு இவ்வாறான செயலிகள் பெரிதும் உதவும் என்று குறிப்பிட்டார்.
மொன்றியலின் மூத்த வர்த்தகர் முத்தையா ராசகோபால் அவர்களுக்கு சிறத்த சிறந்த வர்த்தகப் பெருமகன் விருதினை தமிழ்த்தேனீ அமைப்பாளர் திரு செல்லையா மூர்த்தி அவர்கள் வழங்கி சிறப்பித்தார். இது TamilBee ஆல் வழங்கப்பட்ட முதலாவது விருதாகும். அத்துடன் கே.பி.எஸ் நகைமாளிகை உரிமையாளர் நிரோசன் சந்திரமூர்த்தி அவர்களும் மதிப்பளிக்கப்பட்டார்.
தொடர்ந்து ரொரோன்ரோவில் இருந்து வருகை தந்திருந்த UB50 என்ற இசைக்குழுவினர் இசை மழை பொழிந்து அந்த இரவை இன்னிசை இரவாக்கினர். இசைஞானி இளையராஜாவின் ஜனனி..ஜனனி பாடலுடன் ஆரம்பித்த இசை நிகழ்வு 2 மணித்தியாலைங்களுக்கு மேல் பாரவையாளர்களை மெய்மறந்து இரசிக்க வைத்தது. இந்த நிகழ்வில் ரொரொன்ரொ , மொன்றியல் இசைக்கலஞர்களும், பாடகர் பாடகியர்களும் சேர்ந்து ஒரே குழுவினராக இசை வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும். இசைக்குழுவினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவர்களின் இசையுடன் நிகழ்வு ஆரம்பித்த வழமைக்கு மாறான விழாவின் பரிமாணத்தையும் சிறந்த ஒலி ஒளி அமைப்புகளையும் பிரதம விருந்தினர்கள் மெச்சினர் என்றால் மிகையல்ல!. வாய்க்கு ருசியான அறுசுவை உணவின் பின்னர் அசத்தலான பல நடனங்களுடன் விழா முடிவுற்றது.
ஒரு மொன்பொருள் பணியாளராக பல்காலம் வேலை செய்து வரும் செல்லையா மூர்த்தி அவர்கள் கனடா சமுகத்திற்காக தயாரித்து தந்திருக்கும் வலைத்தளமும் அலைபேசி செயலியிம் வரும் காலங்களில் எமது தலைமுறைக்கு பெருமளவில் உதவும் என்பது திண்ணம்.