ரேவண்ணா விவகாரம்: முதல்வர் சித்தராமையாவிற்கு ராகுல்காந்தி கடிதம்
Share
கர்நாடகத்தில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்டார். தேர்தல் முடிந்ததும் அவர் ஜெர்மனி சென்றுவிட்டார். அவரை கைது செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ராகுல்காந்தி கடிதம் தொடர்பாக சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான சமீபத்திய வழக்கு இந்திய தேசத்தையே உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை நிலைநாட்டுவது நமது சட்ட அமைப்பில் நம்பிக்கையைப் பேணுவதற்கு முக்கியமானது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று வலியுறுத்தி ராகுல் காந்தி எனக்கு கடிதம் எழுதியுள்ளார். நியாயமான செயல்முறையை உறுதிப்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்