LOADING

Type to search

உலக அரசியல்

“பூமியை நெருங்கும் எரிகற்கள்… – நாசா அதிர்ச்சி!

Share

விண்வெளியிலிருந்து இரண்டு எரிகற்கள் பூமியை மிக அருகில் நெருங்கி வருவதாகவும், ஆனால் பூமிக்கு ஆபத்து இல்லை என நாசா விளக்கம் அளித்துள்ளது.

சூரிய குடும்பத்தையும், பால்வழி அண்டத்தையும் ஆய்வு செய்ய நாசா பல்வேறு ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 2023-ம் ஆண்டு அக்டோபரில் சைக் 16 என பெயரிடப்பட்ட சிறுகோளை ஆய்வு செய்ய  விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு நாசா அனுப்பியது. இந்த வாரத்தின் தொடக்கத்தில், டி.எஸ்.ஓ.சி தொழில்நுட்பத்தின் திறனை நிரூபிக்கும் வகையில் சைக் 16 கோளில் இருந்து லேசர் சிக்னல் பூமிக்கு கிடைத்தது. இதன்படி, 14 கோடி மைல்கள் தொலைவில் இருந்து அந்த விண்கலம் தகவல்களை நாசாவுக்கு அனுப்பியது. இந்த தொலைவானது பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தொலைவைப் போன்று 1.5 மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுகளை மகிழ்ச்சியாக பகிர்ந்துக்கொண்டிருக்கும் நேரத்தில், விண்வெளியிலிருந்து இரண்டு எரிகற்கள் பூமியை மிக அருகில் நெருங்கி வருவதாக நாசா எச்சரித்துள்ளது. நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, இவ்விரண்டு எரிகற்களும் வெவ்வேறு கூட்டத்திலிருந்து வருவதாகவும், வெவ்வேறு வேகத்தில் வந்துகொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த எரிகற்களால் பூமிக்கு ஆபத்து ஏற்படுமா? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் நாசா விவரித்துள்ளது. நாசா தொடர்ந்து எரிகற்களை கண்காணித்து வருகிறது. வழக்கமாக 140 மீட்டரை விட பெரிய எரிகற்கள்தான் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அதுவும் பூமியின் வட்டப்பாதைக்குள் வந்தால் மட்டுமே. நல்லவேலையாக, 2024 எச்கே 1 மற்றும் ஜேஇ இரண்டுமே புவி வட்டப்பாதைக்குள் வெளியே செல்கின்றன.