விமான ஊழியர்கள் போராட்டம் – சென்னையில் 8 விமானங்கள் ரத்து
Share
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்களுக்கும் அதன் நிர்வாகத்தினருக்கும் இடையே பிரச்சினை நிலவிவருகிறது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் திடீரென உடல்நிலையை காரணம் காட்டி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விமானங்களை இயக்க விமானிகள், பொறியாளர்கள், ஊழியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன விமானங்களை இயக்குவதில் சிக்கல் உருவாகி ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் அந்த விமான நிறுவன ஊழியர்களின் போராட்ம் நீடித்து வருகிறது. ஊழியர்கள் இன்னும் பணிக்கு திரும்பவில்லை. இதனால் 2-வது நாளாக பல்வேறு நகரங்களில் அந்த நிறுவனத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. சென்னை விமான நிலையத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் கேபின் குழு ஊழியர்கள் பலர் திடீர் விடுப்பு எடுத்து உள்ளதால் மொத்தம் 8 விமானங்கள், ரத்து செய்யப்பட்டு உள்ளனர்.