LOADING

Type to search

இந்திய அரசியல்

அட்சய திருதியை முன்னிட்டு ஒரே நாளில் 3 முறை உயர்ந்த தங்கம் விலை – பொதுமக்கள் அதிர்ச்சி!

Share

சென்னையில் அட்சய திருதியை முன்னிட்டு ஒரே நாளில் மட்டும் தங்கத்தின் விலை 3 முறை உயர்ந்து சவரன் ரூ.54,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

     அட்சய திருதியை என்றாலே நம் நினைவுக்கு வருவது தங்க நகைகளும், அதற்கான ஆஃபர்களும் தான். ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. சித்திரை மாதம் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறையே, அட்சய திருதியை நாளாக கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை கொண்டாடப்படும் நிலையில் அனைத்து நகை கடைகளிலும் தோரணங்கள் மற்றும் வாழை மரங்கள் கட்டி வாடிக்கையாளர்களை உரிமையாளர்கள் வரவேற்றனர். இந்நிலையில் ஒரே நாளில் மட்டும் தங்கத்தின் விலை 3 முறை உயர்ந்துள்ளது. காலை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 53,280க்கும், கிராம் ஓன்றின் விலை ரூ. 6660க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து இரண்டாவது முறையாக மீண்டும் ரூ. 360 உயர்ந்து சவரன் ஒன்று ரூ. 53,640க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 3-வது முறையாக கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ. 6,770க்கும், சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து ரூ. 54, 160க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து ஒரே நாளில் 3 முறை தங்கம் விலை உயர்ந்ததால், நகைக் கடைகளில் குவிந்த வாடிக்கையாளர்கள் சிறிது நேரம் அதிர்ச்சி அடைந்தனர்.