கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்குள் புகுந்த மழைநீர்
Share
தமிழக அரசு சார்பில் மதுரையில் பிரமாண்டமாக ‘கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தை 4 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரையின் மற்றுமொரு அடையாளமாக உள்ளது. ஆனால் கடந்த ஒரு வாரமாக மாநிலம் முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வரும் நிலையில் 2 நாட்களாக மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. 2 நாட்களாக மதுரையில் மழை பெய்து வரும் நிலையில், நவீன அறிவியல் தொழில்நுட்ப அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்குள் மழை நீர் புகுந்தது. கீழ் தளத்தில் உள்ள கலைக்கூடம் மற்றும் பார்வையற்றோர் பிரிவு ஆகியவை தண்ணீரில் மிதக்கிறது. இதனால் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் கீழ் தளத்தில் உள்ள பார்வையற்றோர் பிரிவு மற்றும் கலைக்கூடத்தை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டடத்திற்கு வெளிப்புறமாக செல்லக்கூடிய மழைநீர் குழாய் உடைந்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால் இந்த 2 பிரிவுகளை மட்டும் பொதுமக்கள் பயன்படுத்த தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கீழ்தளத்தில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், வழக்கம்போல நூலகம் செயல்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.