LOADING

Type to search

உலக அரசியல்

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி – அமெரிக்கா இரங்கல்

Share

ஈரான் அதிபர் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரஷிய அதிபர் புதின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘ரஷியாவின் உண்மையான நண்பர் ரைசி’ என்று புகழாரம் சூட்டியுள்ளார், இதேபோல் துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளின் அதிபர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்தியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் துக்கம் அனுசரிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஈரான் அதிபருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியா முழுவதும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும். எனவே நாடு முழுவதும் அரசு கட்டிடங்களில் உள்ள தேசியகொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். இன்று நடைபெற இருந்த அரசு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன’ என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் வெளியிட்ட அறிக்கையில், “வடமேற்கு ஈரானில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் அமீர்-அப்துல்லாஹியன் மற்றும் அவர்களது தூதுக்குழு உறுப்பினர்களின் மரணத்திற்கு அமெரிக்கா தனது உத்தியோகபூர்வ இரங்கலைத் தெரிவிக்கிறது. ஈரான் ஒரு புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் போது, ஈரானிய மக்களுக்கும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்துக்கான அவர்களின் போராட்டத்திற்கும் எங்களது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்” என்று அதில் தெரிவித்துள்ளார்.