முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு நெஞ்சுவலி
Share
தமிழக காவல் துறையில் சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், இவருக்கு விழுப்புரம் மாவட்ட கோர்ட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ராஜேஷ் தாசை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில், வீட்டு காவலாளியை தாக்கிய வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கேளம்பாக்கம் காவல்துறை கைது செய்தனர். சென்னை பனையூரில் உள்ள வீட்டில் வைத்து ராஜேஷ் தாஸை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ராஜேஷ் தாஸை செங்கல்பட்டு திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர். அப்போது ராஜேஷ் தாஸ் நெஞ்சு வலிப்பதாக கூறியதையடுத்து அவரை அழைத்து வந்த வாகனத்தில் அமர வைத்தனர். இதையடுத்து அவரை திருப்போரூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.