LOADING

Type to search

உலக அரசியல்

2 வாரத்தில் 3 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த பூர்ணிமா

Share

உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை இரண்டே வாரத்தில் மூன்று முறை ஏறிய நபர் என்ற சாதனையை நேபாள மலையேறும் புகைப்படப் பத்திரிகையாளருமான பூர்ணிமா ஷ்ரேஸ்தா படைத்துள்ளார்.

பூர்ணிமா முதலில் மே 12 அன்று எவரெஸ்ட் சிகரத்தின் 8848.86 மீட்டர் உச்சத்தை அடைந்தார். மீண்டும் அவர் மே 19 அன்று பசாங் ஷெர்பாவுடன் இணைந்து உச்சியை அடைந்தார். அடுத்ததாக மூன்றாவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளார்.

பூர்ணிமா எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது இது நான்காவது முறையாகும். 2018 ஆம் ஆண்டு முதல் முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் அவர் ஏறினார்.

மேலும், அவர் மனாஸ்லு, அன்னபூர்ணா, தௌலகிரி, கஞ்சன்ஜங்கா, லோட்சே, மகலு மற்றும் மவுண்ட் கே2 உள்ளிட்ட உயரமான பல மலை சிகரங்களை வெற்றிகரமாக எறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.