LOADING

Type to search

உலக அரசியல்

இடது கை இல்லாமல் பிறந்த சிறுவனுக்கு ‘பயோனிக்’ கை பொருத்தம்

Share

அமெரிக்காவில் இடது கை இல்லாமல் பிறந்த ஜோர்டான் என்ற 5 வயது சிறுவனுக்கு பயோனிக் கை பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மிக இளம் வயதில் பயோனிக் கை பொருத்தப்பட்டவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

சிறுவன் ஜோர்டானின் கோரிக்கையின்படி ‘அயர்ன் மேன்’ படத்தில் வரும் சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்ட பயோனிக் கை அவருக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சூப்பர் ஹீரோ அந்தஸ்தையும் அவர் பெற்றுள்ளார்.

இந்த பயோனிக் கை ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி மூலம் இயங்குகிறது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் இது 14 மணிநேரம் வேலை செய்யும்.

சிறுவன் ஜோர்டானுக்கு முன்பே கடந்த ஆண்டு, இங்கிலாந்தைச் சேர்ந்த 10 வயது ஹாரி ஜோன்ஸ் என்ற சிறுவனுக்கு ‘அயர்ன் மேன்’ பயோனிக் கை பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.