வடக்கில் கனடாவின் துணைத்தூதரகம் ஒன்றை திறக்க நல்லை ஆதீனம் வேண்டுகோள்
Share
நடராசா லோகதயாளன்.
கனடா துணைத்தூதரகத்தை வடக்கில் நிறுவி,மக்களுக்கு உதவவேண்டும் என நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் துணைத் தலைவர் ஆறு.திருமுருகன் ஆகியோர் கனேடியத் தூதுர் எரிக் வால்ஷ் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனடா நாட்டுத்தூதுவர் யாழ்ப்பாணத்தில் நல்லை ஆதீனத்தின் குரு முதல்வர் மற்றும் ஆறு திருமுருகன் உட்பட இந்துமத ஆன்மீக பெரியோர்களை சந்தித்து பேசினார். அதன் போதே இந்த கோரிக்கையை இருவரும் விடுத்தனர்.
இதன்போது நல்லை ஆதீன முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்,செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், ஆன்மீகச்சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் ஆகியோருடன் நாட்டின் இன்றைய சூழ்நிலை தொடர்பாக கனேடிய தூதர் கலந்துரையாடினார்.
நல்லை ஆதீன முதல்வர் கனடாநாட்டில் வாழும் எம்மக்களைக் கௌரவமாக அங்கு வழிநடத்துவதற்கு நன்றி கூறியதோடு இந்த நாட்டில் நிலவும் இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக கனடா நாடு இலங்கை அரசுடன் பேசவேண்டும் என்பதனை வலியுறுத்தினர்.
கனடா துணைத்தூதரகத்தை வடக்கில் நிறுவி,மக்களுக்கு உதவவேண்டும் எனவும்,கனடா தூதுவராலய விசா அலுவலகம் வடக்குப் பகுதியில அமையவேண்டிய அவசியத்தையும் விளக்கினர்.தொடர்ந்து போரில் இறந்தவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் வழிபாடு செய்யும் உரிமையினையும் எடுத்துரைத்தனர்.