LOADING

Type to search

இந்திய அரசியல்

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை சந்தித்து ஆசி பெற்றார் மோடி

Share

மக்களவை தேர்தலில் பாஜக-வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பாஜக ஆட்சி அமைக்கிறது. மோடியை தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக அதில் உள்ள கட்சிகள் தேர்வு செய்தன. தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுடன் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர் மோடியை நாடாளுமன்ற குழு தலைவராக எம்.பி.க்கள் தேர்வு செய்தனர். இதனால் அதிபர் திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர இருக்கிறார். இந்த நிலையில் பாரத ரத்னா விருதை பெற்றவரும், பாஜகவின் முன்னாள் தலைவருமான எல்.கே. அத்வானியை அவரது வீட்டில் சந்தித்து ஆசி பெற்றார். மோடி 3-வது முறை பிரதமராக வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை பதவி ஏற்க உள்ளார். இந்த பதவி ஏற்பு விழாவில் உலக நாடுகளில் பல தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.