LOADING

Type to search

இந்திய அரசியல்

நீட் தேர்வு முறைகேடு விவகாரம்: தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கைது!

Share

தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

     நிகழாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 574 நகரங்களில் 4,750 தேர்வு மையங்களில் கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. இதில்,  23.33 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி உட்பட 24 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 200 தேர்வு மையங்களில் 1.52 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். நாடு முழுவதும் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம்,  உருது உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில், விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு பெற்று, தேர்வு முடிவுகள் இணையப் பக்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று வெளியானது. இதில் நாடு முழுவதும் மொத்தம் 13,16,268 (56.41%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே பீகார் மாநிலத்தில் நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியானது. மேலும், நாடு முழுவதும் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததும், ஹரியாணாவில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் முதலிடம் பிடித்த சம்பவங்கள் சர்ச்சையைக் கிளப்பின. நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் உள்ளதால் மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், நீட் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்தும், மறு தேர்வு நடத்தக்கோரியும் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட  மாணவர்களை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.