LOADING

Type to search

இந்திய அரசியல்

தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளார். விருதுநகரில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா?

Share

மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் ஏற்பட்டதாக தேர்தல் ஆணையத்தில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் புகார் அளித்துள்ளார். டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த பிறகு இது குறித்து விஜய பிரபாகரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “விருதுநகர் தொகுதியில் மறு தேர்தல் கோரிக்கை இல்லை, விருதுநகரில் வாக்கு எண்ணிக்கையின்போது குளறுபடியானதால், வாக்கு எண்ணிக்கையை மீண்டும் நடத்த கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. ஆணைய அதிகாரிகள் ஒரு வாரத்தில் முடிவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனர். மறுவாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவை அறிவிக்கட்டும். அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். தேமுதிக தோல்வியை கண்டு பயப்படுகிற கட்சி அல்ல. மறுவாக்கு எண்ணிக்கையில் தோல்வி அடைந்தாலும் மார்தட்டி வரவேற்று ஏற்றுக்கொள்கிறேன். கஷ்டப்பட்டு உழைத்து அங்கீகாரம் கிடைக்காததால் ஏற்பட்ட வலியின் வெளிப்பாடுதான்” எனத் தெரிவித்துள்ளார்.