LOADING

Type to search

உலக அரசியல்

“ஹஜ்” பணிகளை கவனிக்கயுள்ளதால் ஜி.7 மாநாட்டில் கலந்து கொள்ள இயலாதென சவுதி இளவரசர் அறிவித்துள்ளார்

Share

ஜி-7 அமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா மற்றும் ஜப்பான் ஆகியவை அடங்கும். இந்த அமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க மற்ற நாடுகளின் தலைவர்களும் சர்வதேச அமைப்புகளும் விருந்தினர்களாக அழைக்கப்படுகின்றனர். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான மாநாட்டை இத்தாலி நடத்துகிறது. ஜி-7 மாநாடு இத்தாலியின் அபுலியா நகரில் இன்று முதல் வரும் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி காணொளி மூலம் மாநாட்டில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியா உட்பட 12 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இத்தாலியில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஜி-7 மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்ததற்கு நன்றி தெரிவித்து, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனிக்கு கடிதம் எழுதியுள்ள அவர், ஹஜ் பயணத்தை கவனிக்க உள்ளதால், ஜி-7 மாநாட்டில் பங்கேற்க முடியாது என தெரிவித்துள்ளார்.