தமிழக அரசு பாடசாலையில் பயிலும் மாணவ மாணவிகளுக்கும் மாதம் ரூ.ஆயிரம் உதவி தொகையை அறிவித்தார் ஸ்டாலின்
Share
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கான திட்டங்களும் நல்ல முறையில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக காலை உணவு திட்டம் மக்களிடையே மாணவர்கள் மத்தியிலும் உள்ள வரவேற்பை பெற்றிருந்தது.
மாணவர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ரூ.455 கோடியே 32 லட்சம் மதிப்பில் திறன்மிகு வகுப்பறைகள் தொடக்க விழா, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா, 67 வது தேசிய அளவிலான போட்டிகளில் தங்கப்பதக்கங்கள் வென்ற மாணவ மாணவிகளை பாராட்டு விழா, பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர்களை பாராட்டு விழா, தொடக்கக் கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் ஐம்பெரும் விழா ஆகியவை கோவையில் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து செயல்படுத்தப்பட இருக்கும் புதிய திட்டம்தான், அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமாகும். இத்திட்டத்திற்கு “தமிழ் புதல்வன் திட்டம்”. என அறிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் இத்திட்டம் பற்றி பேசிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், இத்திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். சொன்னது போலவே தமிழ்ப்புதல்வன் நேற்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் பேசிய முதல்வர், பள்ளிக்கல்வித்துறை மாணவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் காலை உணவு திட்டம்,
, நான் முதல்வன் உன்கிட்ட ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அதில் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் புதுமைப் பெண் திட்டமும் குறிப்பிடத்தக்கது என்று கூறினார். இந்த மகிழ்ச்சியை மாணவர்களின் முகத்திலும் பார்க்க வேண்டும் என்பதற்காக தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு ரூ. ஆயிரம் வழங்கும் திட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.