ஆந்திராவில் பா.ஜ.கவுக்கு எதிராக வாக்களித்த ஜெகன்மோகன் ரெட்டி மோடிக்கு ஆதரவுக்கரம் நீட்டினார்
Share
ஆந்திர பிரதேசத்தில் புதிய அரசியல் திருப்பமாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் (ஒய்எஸ்ஆர்சிபி) தலைவர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திர மாநிலம் மற்றும் தேசத்தின் நலன்களை மனதில் வைத்து பிரச்சினை அடிப்படையிலான பாஜகவிற்கு தனது ஆதரவை வழங்குவேன் என்று தெரிவித்துள்ளார். தனது கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 15 எம்.பி.க்கள் இருப்பதை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்.டி.ஏ.) நினைவூட்டி பாஜகவிற்கு தனது ஆதரவை நீட்டி உள்ளார். லோக்சபா 2024 தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாமல் வீழ்ந்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் தனக்கு எதிராக பல வழக்குகள் உள்ள நிலையில், மாநில அரசின் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க ஜெகன் மோகன் ரெட்டி மோடியிடம் தஞ்சம் அடைய முடிவு செய்துள்ளார்.
அதன்படி, ஆந்திர பிரதேசத்தில் புதிய அரசியல் திருப்பமாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் (ஒய்எஸ்ஆர்சிபி) தலைவர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திர மாநிலம் மற்றும் தேசத்தின் நலன்களை மனதில் வைத்து பிரச்சினை அடிப்படையிலான பாஜகவிற்கு தனது ஆதரவை வழங்குவேன் என்று தெரிவித்துள்ளார். ஒய்.எஸ்.ஆர்.சி.பி.க்கு ராஜ்யசபாவில் 11 எம்.பி.க்களும், லோக்சபாவில் நான்கு எம்.பி.க்களும் உள்ளதால் மொத்த பலம் 15 ஆக உள்ளன. தெலுங்கு தேசம் கட்சிக்கு (டிடிபி) 16 எம்.பி.க்கள் உள்ளனர். சம பலத்துடன் சக்தி வாய்ந்தவர்களாக நாம் இருக்கிறோம். யாரும் நம்மை தொட முடியாது, நாம் தைரியமாக, மக்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும், என்று ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.