MRI மற்றும் CT ஸ்கேன்களுக்கான காத்திருப்பு நேரத்தை ஒன்ராறியோ அரசாங்கம் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.- அமைச்சர் விஜய் தணிகாசலம்
Share
ஒன்றாரியோ மாநிலமெங்கும் MRI மற்றும் CT ஸ்கேன் மருத்துவ சேவைகளுக்கு மக்கள் நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையை தவிர்த்து அதனை 28 நாட்களாக குறைக்க ஒன்ராறியோ அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கென ஆண்டுதோறும் 100,000 MRI மற்றும் CT ஸ்கேன்களை ஒன்ராறியோ அரசு சமுக நிலையங்களில் நிறுவவுள்ளது. என ஒன்றாரியோ மாநில அமைச்சர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளா.
அவர் மேலும் தெரிவிக்கையில் , “ஸ்கேன் வசதிகள் குறுகிய காலத்துக்குள் கிடைக்கச் செய்வதன் மூலம் அதிகரிப்ப ஒன்ராறியோ சுகாதாரத்தினை மேம்படுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளதுடன், சரியான நேரத்தில் மதுத்துவ சேவைகள் கிடைக்க வேண்டிய முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார். இம்முன்முயற்சியானது அனைத்து மக்களுக்கும் சரியான நேரத்தில் உயர்தர மருத்துவ பராமரிப்பு கிடைக்கப் பெறுவதற்கான ஒன்ராறியோ அரசின் உறுதிப்பாட்டைக் காண்பிக்கிறது” என்றார்