LOADING

Type to search

கனடா அரசியல்

கனடாவில் மே 2024 இல் அதிகரித்த பணவீக்க விகிதம் ஜூலையில் குறையும் என்று எதிர்பார்க்கலாமா?

Share

பல ஆண்டுகளாக, கனடாவில் பணவீக்கம் கணிசமான அளவு உயர்ந்துள்ளது, இதனால் கனடியர்களுக்கு வாழ்க்கைச் செலவு மற்றும் வீட்டு வசதிகள் தொடர்பான செலவுகள் அதிகரித்துள்ளதனால் அவர்கள் கவலைப்படுவதோடு பொருளாதாரம் சம்பந்தப்படட சவால்களையும எதிர் கொள்கின்றார்கள்.

இந்த ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் 2.7 சதவீதமாக இருந்த ஆண்டு விகிதம் மே மாதத்தில் 2.9 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பகுப்பாய்வாளர்கள் பணவீக்கம் 2.6 சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கிறார்கள் ஆனால் அதிகமான சேவை விலைகள் அதிகரித்ததன் காரணமாக முடக்கம் அதிகரித்ததாக கனடாவின் புள்ளிவிவரங்கள் தயாரிக்கும் திணைக்களம் கூறியது. பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருவதால் கனடா வங்கி தனது முதல் வட்டி விகிதக் குறைப்பை அறிவித்தது.

அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் மற்றும் அதிகரித்து வரும் மக்கள்தொகை ஆகியன கனடா முழுவதும் வீட்டு வாடகை கட்டணங்களை அதிகரித்துள்ளதால் ஒன்றாரியோ வாழ் மக்கள் இப்போது வாடகைக்கு அதிக கட்டணம் செலுத்துகின்றனர். அடமான வட்டி இன்னும் பணவீக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அடமான வட்டிகள் பல ஆண்டுகளாக 23.3 சதவீதம் அதிகரித்தன, அதே நேரத்தில் வாடகை விலை 8.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே நேரத்தில் உணவுப் பொருட்களின் விலைகள் மற்றும் கைத் தொலைபேசி சேவைகளுடன் தரைப் பயணம் மற்றும் விமானப் பயணங்களின் கட்டணங்களும் உயர்ந்துள்ளன.

2023 மே மாதத்துடன் ஒப்பிடும்போது, 2024 ​​மே மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை 1.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இது ஜூன் 2023க்குப் பிறகு உணவுப் பொருட்களுக்கான செலவுகளில் முதல் அதிகரிப்பைக் குறிக்கிறது. 2020ஆம் ஆண்டை விட பொதுமக்கள் உணவுப் பொருட்களுக்கு செலவு செய்யும் பணம் 22.5 சதவீதம் அதிகமாகச் செலுத்துவதாக கனடா புள்ளிவிவரங்கள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

அத்துடன் காய்கறிகள், இறைச்சி, பழங்கள் மற்றும் மது அல்லாத பானங்கள் ஆகியவற்றின் விலைகள் மாதத்திற்கு மாதம் அடிப்படையில் 6.4 சதவீதமாக உயர்ந்துள்ளன.

2023 உடன் ஒப்பிடும்போது பெட்ரோல் விலை 2024 ம் ஆண்டில் 5.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த அதிகரிப்புடன், சந்தை ஜூலையில் விற்பனையில் 40 சதவீத சரிவை எதிர்பார்க்கலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். , ஆனால் புள்ளிவிவரங்கள் திணைக்களமானது கனடா இன்னும் ஏப்ரல் மாதத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தித் தரவை அடுத்த வாரம் வரை ஜூலை 24 அன்று சமர்ப்பிக்கின்ற போதுதான் அடுத்த விகித முடிவு எடுக்கப்படும் என அறியப்படுகின்றது