LOADING

Type to search

ராசி பலன்

05.07.2024 வெள்ளி முதல் 11.07.2024 வியாழன் வரையும்

Share

 


ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்

“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377

மேஷம்:

உடல்நலத்தில் ஷேமம் கிடைக்கும் வாரம். ஆலய தரிசனம் அமைதியை தரும். கணவன், மனைவி உறவு தித்திக்கும். சுபகாரியங்கள் இல்லத்தில் இனிதே நடந்தேறும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். பண நடமாட்டம் கூடும். இயற்கை காட்சிகளை கண்டு இன்புறுவீர்கள். உல்லாசப் பயணம் இனிக்கும். புதிய வேலை முயற்சி பலிதமாகும். வெளிவட்டாரப் பழக்கம் அதிகமாகும். இல்லத்தில் மனமகிழ்ச்சி கிட்டும். கடன் சுமை குறையும்;. கன்னிப் பெண்களின் விருப்பம் ஈடேறும். பூமியால் லாபம் உண்டு. செய்த்தொழில் வியாபாரம் செழிக்கும். இல்வாழ்வில் இனிமை கூடும். தென்றல் வீசும். எதிர்ப்புக்கள் விலகும். நோய், நொடிகள் அகலும். பெயர், புகழ் கௌரவம் செல்வாக்கு உயரும். புதிய வாகனங்களில் முதலீடு உண்டாகும். பெண்களுக்கு மன அமைதியும், மகிழ்ச்சியும் கிட்டும். விரும்பியது நிறைவேறும். வெளிநாட்டுத் தொடர்பு ஆதாயம் தரும். கலைஞர்களுக்கு ஒப்பந்தம் குவியும். நட்பு வட்டம் விரிவடையும். பாராட்டுக்கள் கூடும். வேண்டும் வரம் கிட்டும். தன்னம்பிக்கையும், துணிச்சலும் மேலோங்கும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றி முகமாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி கிட்டும். ஒரு சிலருக்கு கவுரவப் பதவிகள் தேடி வரும். அரசியல்வாதிகள், ஆன்மீக வாதிகள் உத்தியோகஸ்தர்கள் ஏற்றம் பெறுவார்கள். பழைய கடன் அடையும். பங்குச்சந்தை லாபம் தரும். நீண்டதூரப் பயணம் லாபம் தரும். கலை ஆர்வம் பெருகும். பொறுப்புக்கள் சிறப்பு சேரும். ஆதாயம் பெருகும். சம்பளம் எதிர்பார்த்தபடி வரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சித்ரகுப்தர்; அதிர்ஷ்ட எண்: 4, 3, 9, 1 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு (கருமை) அதிர்ஷ்ட எழுத்துக்கள்: X, H

ரிஷபம்:

கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும் வாரம். பொருளாதாரம் ஏற்றம் பெருகும். முகப்பொலிவு கூடும். உடல் நலம் சிறக்கும். மனதில் தெம்பும், தைரியமும் கூடும். புதிய தொழில் முயற்சியை தள்ளிப்போடுங்கள். திருமண பாக்கியம் கூடி வரும். கொடுக்கல், வாங்கலில் சுமூக நிலை காணப்படும். செல்வாக்கு உயரும். உத்தியோக பெண்களுக்கு பதவி உயர்வு கிட்டும். பழைய சம்பள பாக்கிகளும் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்களில் முதலீடு உண்டாகும். தொலைதூரத் தொடர்பு லாபம் தரும். நவகிரஹ அனுகிரஹம் நன்மை அளிக்கும். ஆடம்பரச் செலவு அதிகரிக்கும். பந்தாவும் குறையாது. பாக்கெட்டில் காசும் கரையாது. தொட்டது துலங்கும். நினைத்தது நடக்கும். இனிக்கும் வாரம் தான். செய்த்தொழில் வியாபாரம் சிறக்கும். திட்டமிட்ட காரியங்களில் ஒன்றிரண்டு நடந்தேறும். வெற்றிப்பாதையில் அடி எடுத்து வைப்பீர்கள். குழப்பங்கள் நீங்கும். குதூகலம் கூடும். மூத்தோர்கள் மனக்குறை அகலும். நினைத்ததை சாதித்துக் காட்டு;ம் சாதனையான காலம். பணப்புழக்கம் சீராக இருந்து வரும். கடன் கச்சைகள் தீரும். குடும்ப மேன்மை அதிகரிக்கும். தொட்டக் காரியம் ஜெயமாகும். பொருளாதார நிலை உயரும். தேவைகள் பூர்த்தியாகும். தேக பலம் கூடும். தொழில் போட்டி மறையும். புதிய முயற்சிகள் கைகூடும். நண்பர்கள் உதவி கிட்டும். ஞாபகத்திறன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ பச்சையம்மன் அதிர்ஷ்ட எண்: 9, 7, 5, 1 அதிர்ஷ்ட நிறம்: ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: I, P

மிதுனம்:

மதிநுட்பத்தோடு செயல்படும் வாரம். வியாபாரம் வெற்றி தரும். தொழிலாளர்களுக்கு மனநிறைவு உண்டு. சேமிப்பு வளரும். சொந்த பந்தங்களால் உதவி உண்டு. பயணத்தால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். வாகனங்களில் முதலீடு உண்டாகும். பணவரவு சுமாராக இருக்கும். தந்தை உடல் நலனில் கவனம் தேவை. வெளியூர் பயணம் உண்டு. பால் தானம் பாவம் போக்கும். வம்பு, தும்புகள் ஒழியும். மேலதிகாரியின் பாராட்டுக் கிடைக்கும். பிள்ளைகளின் தொல்லைகள் அகலும். புதிய கடன் வாங்க நேரிடும். மாணவர்களுக்கு மகிழ்ச்சி கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிட்டும். இடமாற்றத்தால் நன்மை உண்டு. பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். பேச்சில் நிதானம் தேவை. நியாயம் ஜெயிக்கப் போராடுவீர்கள். புதிய நட்பில் கவனம் தேவை. செய்த்தொழிலில் லாபம் தரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். மன ஆரோக்கியம் சிறக்கும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடி வரும். இல்லத்தில் சுபகாரியங்கள் நடந்தேறும். நட்பு வட்டம் விரிவடையும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் வந்து அலைமோதும். புதிய வாய்ப்புக்கள் பயன் தரும். புத்தி சாதுர்யம் பெருகும். வியாபாரத்தில் கவனம் தேவை. வீடு, மனை யோகம் உண்டு. விரக்திகள் மறையும். சிக்கனம் தேவை. காதலர்கள் ஒற்றுமை அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான எண்ணம் உதயமாகும். அன்னிய தேசப் பயணம் உண்டு. வரவுகள் பெருகும். வழக்குகள் முடிவுக்கு வரும். கலைஞர்களுக்கு ஆதாயம் பெருகும்.

வழிபட வேண்டிய தெய்வம்;: ஸ்ரீ அங்காளம்மன் அதிர்ஷ்ட எண்: 6, 9, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: D, K

கடகம்:

ஆசைகள் நிறைவேறும் வாரம். கட்டிடத்தொழிலில் ஒப்பந்தங்கள் குவியும். பயண முயற்சி பலன் தரும். முன்கோபத்தை குறைக்க வேண்டும். ஆபத்துக்கள் விலகும். அதிகாரம் உயரும். ஆபரணச் சேர்க்கையுண்டு. வாகன யோகம் உண்டு. வரவுகள் திருப்தி தரும். கடன் பாக்கிகள் வசூலாகும். பேச்சில் நிதானம் தேவை. பொருளாதாரம் மேம்படும். தோதான வாழ்வமையும். இல்லம் தேடி வாய்ப்புகள் வரும். வாழ்க்கைத் துணையால் வளம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சிப் பொங்கும். ஏற்றங்கள் அதிகரிக்கும். புதிய தொழில் மாற்றம் ஏற்படும். எதிலும் வெற்றி கிட்டும். திருமண தீபம் சுடர்விடும். அணிமணிகள் சேரும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். சுதந்திரமாக செயல்படுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிட்டும். மனக்கசப்பு நீங்கும். அரசு வழியில் ஆதாயம் உண்டு. கணினி துறையில் ஊதிய உயர்வு உண்டு. சகோதரியினால் நன்மை உண்டு. உடல்நலம் மேம்படும். புதிய முதலீடுகளை தவிர்க்கவும். கணவன், மனைவி உறவு
இனிக்கும். ஏற்றமான தருணம் அமையும். தொழில் அபிவிருத்தி உண்டு. மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புக்கள் வரும். பிள்ளைகளால் மனக்கசப்பு வந்து நீங்கும். சிரமப்பட்ட காரியம் நிறைவேறும். வயிறு சம்பந்தமான நோய் வந்து நீங்கும். பங்குச்சந்தையில் லாபம் புரளும். திடீர் பயணம் உற்சாகம் தரும். கர்ம வினைகள் அகலும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ பவானி அம்மன் அதிர்ஷ்ட எண்: 3, 9, 5, 4 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: E, T

சிம்மம்:

அதிகார பேச்சுக்கள் அரங்கேறும் வாரம். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். புதிய தொழில் வாய்ப்புக்கள் பெருகும். பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். ஆரோக்யம் சீராகும். தன வரவுகள் பெருகும். நிர்வாகப் பொறுப்புக்கள் கூடும். வேண்டாத உறவுகளை தவிர்க்கவும். விவசாயிகள் கோரிக்கை நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உறவினர் வழியில் செலவுகள் உண்டு. அரசியல் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் பிரச்சினை முடிவிற்கு வரும். நல்லோர்கள் வாழ்த்து கிடைக்கும். நிதானத்தோடு செயல்பட வேண்டும். காதலர்களுக்குள் மனக்கசப்பு ஏற்படும். பொது விஷயங்களில் நாட்டம் ஏற்படும். அரசு வழியில் கவனம் தேவை. திருமண முயற்சி பலன் தரும். பெற்றோர் உடல் நிலையில் கவனம் தேவை. ஏற்றுமதி தொழில் லாபம் அதிகரிக்கும். அன்னதானம் செய்து ஆனந்தம் அடையலாம். பித்ருக்கள் சாபம் நீங்கும். சேமிப்பு பெருகும். திறமைகள் வெளிப்படும். கூட்டுத்தொழில் லாபம் தரும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். தொழில் இடமாற்றம் நன்மை தரும். பொதுப்பணியில் ஆர்வம் கூடும். எதிரிகள் உதிரியாவார்கள். செல்வாக்கு கூடும். சொல்வாக்கு மேம்படும். பங்குச்சந்தையில் பணம் புரளும். விளையாட்டுத் துறையில் வெகுமதி கூடும். காதலர்கள் தம்பதியாவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். தர்ம சிந்தனை மேலோங்கும். சகோதர வழியில் கவனம் தேவை. ‘ஆலய தரிசனம் பாவ விமோசனம்” ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” மாற்றம் ஏற்படும். புதுமையை விரும்புவீர்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்: யானை பாத விநாயகர்; அதிர்ஷ்ட எண்: 9, 5, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Q, J

கன்னி:

வரவுகள் அதிகரிக்கும் வாரம். அரசுத்துறையில் ஆதாயம் உண்டு. வாழ்த்துச் செய்திகள் வரும். மறைமுக எதிர்ப்புக்கள் மாறும். உறவினர் வருகை உண்டு. புதிய நட்பு ஏற்படும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். வாகன யோகம் உண்டு. வெற்றியை எட்டும் காலம். உடன்பிறப்புக்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்பத்தினர்களிடம் அனுசரிப்பு ஏற்படும். கூட்டுப் பிரார்த்தனை மாற்றத்தை ஏற்படுத்தும். மகிழ்ச்சியான செய்தி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பெண்களின் ஆலோசனை ஆதாயம் தரும். இனம் புரியா சந்தோஷம் மனதில் குடிக்கொள்ளும். உரிய நேரத்தில் உதவிகள் கிடைக்கும். செயல்பாட்டின் தீவிரம் கூடும். குடும்பத்தில் மேன்மைகள் அதிகரிக்கும். ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள். புதிய முயற்சிகள் அலைபேசித் தகவல் ஆதாயம் தரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். பழைய கடன் வசூலாகும். நம்பிக்கை துளிர்விடும். நல்லோர்களின் சந்திப்பு கிட்டும். பேச்சில் பணிவு தேவை. மாற்று இனத்தவரால் நன்மை உண்டு. அயல்நாட்டுப் பயணம் உண்டு. உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். மேன்மைகள் அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும். மருத்துவச் செலவுகள் குறையும். அடுத்தவர் தலையீட்டை தவிர்க்கவும். மன நிம்மதி அதிகரிக்கும். விவேகமான பேச்சுக்களால் வீண் பழி அகலும். வருமானம் திருப்தி தரும். வாகன மாற்றம் உண்டு. மாற்று யோசனை பயன் தரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விளையாட்டில் கவனம் தேவை.

வழிபட வேண்டிய தெய்வம்: அய்யனார் சுவாமி அதிர்ஷ்ட எண்: 4, 9, 6, 2 அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: J, L

துலாம்:

சாதகமான சூழ்நிலைகள் அமையும் வாரம். தொட்டது துலங்கும். யோக பலன் கூடும். வம்பு வழக்குகள் தீரும். எண்ணங்கள் வண்ண மயமாகும். உறவினரால் உதவி கிட்டும். சகோதர வழியில் சந்தோஷம் கூடும். காதலர்களுக்குள் கையிருப்பு கரையும். வியாபாரம் விருத்தியாகும். பங்குச்சந்தையில் லாபம் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பு கிட்டும். விவசாயிகள் கோரிக்கைகள் நிறைவேறும். பெரியோர்களின் பாராட்டு கிடைக்கும். பணியாட்களின் ஆதரவு பெருகும். கூட்டுத்தொழிலில் கவனம் தேவை. தொலைபேசித் தகவல் தொல்லைத் தரும். தொழிலின் ரகசியம் காப்பாற்றப்படுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். பெற்றோர்கள் அன்பு அதிகரிக்கும். மற்றவர்களிடம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. வாழ்க்கையில் பிடிப்பு அதிகரிக்கும். காரிய அனுகூலம் உண்டு. தேக ஆரோக்கியம் திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சொத்துக்களால் லாபம் கிடைக்கம். சுறுசுறுப்பு பெருகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். தாய் வழி உறவில் கவனம் தேவை. மனைவியின் பிரார்த்தனை மாற்றத்தை ஏற்படுத்தும். ஏற்றுமதி தொழிலில் லாபம் தரும். கலவரமான சூழ்நிலை காணப்படும். போட்டி, பொறாமைகள் விலகும். பாகப்பிரிவினை ஏற்படும். மனை வாங்கும் யோகம் உண்டு. மன நெருக்கடிகள் தீரும். ஊக்கம் அதிகரிக்கும். சூழ்ச்சிகளில் இருந்து விடுபடுவீர்கள். இடமாற்றத்தால் இனிய தகவல் உண்டு.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ மருத காளியம்மன் அதிர்ஷ்ட எண்: 1, 6, 4, 9 அதிர்ஷ்ட நிறம்: வெண்பட்டு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: H, K

விருச்சிகம்:

தனித்து நின்று ஜெயித்துக் காட்டும் வாரம். விருந்தினர் வருகை உண்டு. வங்கி சேமிப்பு உயரும். பயணம் லாபம் தரும். பால்ய நண்பர் சந்திப்பு கிட்டும். கமிஷன் தொழில் லாபம் தரும். வாழ்வில் வசந்தம் கூடும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். நல்ல சம்பவங்கள் நடைபெறும். இல்லத்தில்
மேன்மைகள் அதிகரிக்கும். சூழ்நிலைகள் சாதகமாகும். புதிய பொருள் சேர்க்கையுண்டு. அந்நிய தேசப் பயணம் உண்டு. இரும்புத்தொழில் ஏற்றம் தரும். புண்ணியம் சேரும் காலம். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வீண் பிரச்சனைகள் அகலும். மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். பணமும், பாராட்டும் சேரும். ஆசைகள் பூர்த்தியாகும். வாயில் தேடி வரன் வரும். வியாபாரத்தில் வேகம் கூடும். உத்தியோக உயர்வு தாமதமாகும். கணவன், மனைவி அன்யோன்யம் குறையும். பூர்வீகச் சொத்துக்கள் விற்பனையாகும். விலகிச் சென்றவர் விரும்பி வருவர். திருமண பேச்சு முடிவிற்கு வரும். வரவுகள் திருப்தி தரும். மருத்துவச் செலவுகள் குறையும். தாய் வழி தகராறுகள் குறையும். குடும்ப கௌரவம் உயரும். காதல் கைகூடும். கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கனிவான பேச்சு அவசியம். எதிர்பார்த்த உதவி தாமதமாகும். விரக்திகள் மறையும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். திடீர் மாற்றங்கள் நிகழும். கலைஞர்களுக்கு கௌரவம் உயரும். மதிநுட்பம் மாபெரும் வெற்றியைத் தரும். தேக ஆரோக்யம் மிளிரும். எதிர்கால சிந்தனை ஏற்றம் தரும். விரோதங்கள் விலகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: அன்னமார் சுவாமி அதிர்ஷ்ட எண்: 6, 3, 9, 1 அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: K, P

தனுசு:

கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும் வாரம். எடுத்த தொழில் முயற்சியில் வெற்றி உண்டாகும். உள்ளம் மகிழும் . பொல்லாதவர்கள் தொல்லைகள் ஒழியும். உடல்நலம் சீராகும். உற்சாகம் மேலோங்கும். உறவுகளால் நன்மை ஏற்படும். பயணம் வெற்றி தரும். சமுதாய விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது. கல்வியில் மேன்மைகள் உண்டாகும். துயரம் இல்லாத உயரங்களை சந்திப்பீர்கள். முன்னோர்கள் ஆசீர்வாதம் உண்டு. முன்னேற்றங்கள் அதிகரிக்கும். மாற்று மருத்துவம் பலன் தரும். அனுகூலச் செய்திகள் வந்து சேரும். ஆபரணப் பொருள் களவுப்போகும். சுபச்செய்தி தேடி வரும். பாராட்டுக்கள் உயரும். அலைச்சல்
அதிகரிக்கும். ஊதிய உயர்வு கிட்டும். வியாபாரம் சுமாராக இருக்கும். வாகன மாற்றம் ஏற்படும். கடன்சுமை குறையும். எதிரிகள் ஏமாற்றம் அடைவர். மாலை நேரத்தில் இனிய தகவல் வந்து சேரும். பெண்களுக்கு அணிகலன் சேரும். பணியாட்கள் ஆதரவு பெருகும். பிள்ளைகளின் தேவை பூர்த்தியாகும். வளமான சிந்தனை உதயமாகும். அலைச்சல் ஆதாயம் தரும். தீமைகள் விலகும். திட்டமிட்ட காரியம் வெற்றி பெறும். பயணங்களால் வெகுமதி கூடும். கூட்டுப்பிரார்த்தனை நன்மை தரும். இடையூறுகள் அகலும். பெண்களுக்கு பெருமை சேரும். பொது வாழ்வில் புகழ் கூடும். தொழில் வளர்ச்சி பெருகும். ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் விலகும். ஆன்மீக நாட்டம் ஏற்படும். வறுமையின் வாட்டம் குறையும். அவமானங்கள் அகலும். உதவிகள் கிடைக்கும். வெளியூர் பிரயாணம் வெற்றி தரும். வெகுமானம் கிடைக்கும். வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ பிரம்மசக்தி அதிர்ஷ்ட எண்: 2, 4, 9, 6 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: M, Z

மகரம்:

கர்ஜனையோடு வலம் வரும் வாரம். பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேர்வார்கள். பெற்றோர்கள் உதவி கிடைக்கும். விவேகம் வெற்றி தரும். தெளிவான முடிவுகள் உதயமாகும். எதிர்கால தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளின் அன்பு அதிகரிக்கும். எண்ணங்களால் ஏற்றம் பெருகும். உடல்பொலிவு கூடும். பணப்பற்றாக்குறை நீங்கும். கல்வியில் கவனம் தேவை. பயணத்தால் அனுகூலம் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உறவினர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நண்பர்களால் நன்மை உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அலைமோதும். விறுவிறுப்பாக செயல்படுவீர்கள். திட்டமிட்ட செயல்பாடு தேவை. சாதகமான சந்தர்ப்பங்கள் நிகழும். ஆழமான மேன்மைகள் தொடரும். வெளிவட்டாரத் தொடர்பு பெருகும். வேண்டாத நபர்கள் விலகுவர்.
வினைகள் அகலும். புதுமைகள் நிறைந்த காலம். நல்லச்செய்திகள் நாடி வரும். நீண்ட நாளைய கனவு நிறைவேறும். தடைகள் அகலும். உயர் பதவி யோகம் உண்டு. மன உற்சாகம் களை கட்டும். அரசியல் ஆர்வம் ஏற்படும். தெய்வ திருப்பணிகளில் ஆர்வம் கூடும். சாமா;த்தியமாக செயல்படுவீர்கள். பொருள் வரவு இருக்கும். பெண்களின் ஆலோசனை பெருமை சேர்க்கும். பணியில் பாராட்டு கிட்டும். தொழில் வளர்ச்சி கூடும். வயிறு உபாதைகள் வந்து போகும்.
வார்த்தைகளில் சற்று கவனம் தேவை. நண்பர்கள் சந்திப்பு நன்மை பயக்கும். சகோதர வகையில் சகாயம் கிட்டும். வியாபாரம் சிறக்கும். மனைவி பிள்ளைகளிடம் மதிப்பு உயரும். திடீர் பயணம் ஏற்படும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஈசான்ய லிங்கம் அதிர்ஷ்ட எண்: 4, 9, 2, 3 அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: X, J

கும்பம்:

மாங்கல்ய பாக்கியம் அமையும் வாரம். பிள்ளைகளிடம் மதிப்பு உயரும். காரிய வெற்றி கிட்டும். பெரியோர்களின் ஆதரவு பெருகும். ஆடம்பர பொருள் சேரும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். குடும்ப குழப்பங்கள் அகலும். எதிர்ப்புக்கள் மாயமாய் மறையும். பெண்களால் பெருமை உண்டு. விளையாட்டுத் துறையில் வெகுமானம் உண்டு. சச்சரவுகள் சமாதானத்தில் முடியும். விவசாயம் லாபம் தரும். வீடு, மனை யோகம் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உடல் உஷ்ணம் அதிகரிக்கும். கடன் பாக்கிகள் வசூலாகும். பணவரவு திருப்தி தரும். குடும்ப குழப்பம் தீரும். பிள்ளைகள் வழியில் சந்தோஷம் அதிகரிக்கும். பணியாட்களிடம் கவனம் தேவை. பங்குச்சந்தை லாபம் தரும். சகோதர ஒற்றுமை உண்டு. ஏற்றுமதி தொழிலில் லாபம் அதிகரிக்கும். உழைப்பு கடுமையாக இருக்கும். பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய தொழில் அமையும். பெருமைகள் சேரும். அடுத்தவர் தலையீடு அமைதியை கெடுக்கும். மனநிலையில் மாற்றம் ஏற்படும். நண்பர்களின் பேச்சு ஆறுதல் தரும். பயணம் அனுகூலம் தரும். மனம் மகிழ்ச்சி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் திருப்தி ஏற்படும். சகோதர ஒற்றுமை பலப்படும். புத்துணர்வோடு செயல்படுவீர்கள். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். தொழில் வளர்ச்சி கூடும். வாய்ப்புக்கள் வாயில் தேடி வரும். நல்லோர்களின் வாழ்த்துக் கிட்டும். ஆண்களின் அதிகாரம் உயரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். சுப விரயம் உண்டு. குடும்ப மேன்மைகள் உண்டாகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ வைகுண்ட நாதர் அதிர்ஷ்ட எண்: 9, 7, 5, 4 அதிர்ஷ்ட நிறம்: ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Y, N

மீனம்:

இனிய நட்புக்களால் பெரிய வெற்றி கிடைக்கும் வாரம். உண்மைகள் வெளிப்படும். உறவுகள் தாமதமாகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். தன சேர்க்கையுண்டு. மன நிம்மதி குறையும். அலைச்சல் அதிகரிக்கும். புதிய முயற்சியில் ஈடுபடலாம். வாகனச் செலவு ஏற்படும். பணியில் பாராட்டுக் கிட்டும். சிக்கனத்தை கையாள வேண்டும். பொறுப்புக்கள் கூடும். சேமிப்பு அதிகமாகும். புதிய சிந்தனை உதயமாகும். அணிகலன்கள் சேர்க்கை ஏற்படும். கண்ணாடிப் பொருட்கள் சேதம் உண்டாகும். கௌரவத்தில் கவனம் தேவை. கலக்கமான மனநிலை காணப்படும். பயணம் அனுகூலம் தரும். வரவுகள் திருப்தி தரும். உதவிகள் குவியும். நீண்ட கால எண்ணம் நிறைவேறும். அத்தியாவசிய தேவைககள் பூர்த்தியாகும். போதிய தனவரவு இருக்கும். மாலை நேரத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு ஆபரணம் சேரும். சொத்துப் பிரச்சனை தீர்வுக்கு வரும். திட்டமிட்ட காரியம் வெற்றி பெறும். எதிர்ப்புக்கள் தவிடுப் பொடியாகும்.
நண்பர்களால் மதிப்பு உயரும். அதிகாரியின் பாராட்டு கிட்டும். பணியில் இடமாற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பெருமைகள் கூடும். செல்வாக்கு உயரும். குடும்ப அன்யோன்யம் சிறக்கும். நல்லச் செய்திகள் நாடி வரும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் பிடிப்பு ஏற்படும். முயற்சிகளில் வளர்ச்சியடையும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடி வரும். தொழில் ரகசியம் காப்பது நல்லது. உறவினர்களிடம் சஞ்சலம்
ஏற்பட்டு மறையும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ செல்வநாயகி அதிர்ஷ்ட எண்: 7, 4, 1, 2 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Q, R