LOADING

Type to search

உலக அரசியல்

காசா போர்: 38 ஆயிரம் பேர் உயிரிழப்பு

Share

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 9 மாதமாக நடந்து வரும் போரில் சுமார் 38,011 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 87, ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர் என காசா சுகாதார அமைச்சகம் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தப் போரினால் அதிகம் பாதிப்புக்குள்ளானது பெண்களும் குழந்தைகளிலுமே ஆவர். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு, போர் நிறுத்த முன்மொழிவு என உலக நாடுகளும் ஐ.நா.சபையும் இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர பல வகையில் முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் அது அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது. அதை உறுதி செய்யும் வகையில் பாலஸ்தீன நகரங்களான காசா மற்றும் ரஃபாவில் உள்ள பொதுமக்களின் பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மற்றும் காசா நகரத்தின் பல்வேறு பகுதிகளின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 58 பேர் உயிரிழந்துள்ளனர் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.