LOADING

Type to search

உலக அரசியல்

பிரான்ஸ் தேசத்தின் பாரிஸ் நகரில் நடைபெற்ற பவானியின் “வியன்களம்” “கொற்றவை” ஆகிய நூல்களின் அறிமுக விழா.

Share

09.06.2024 அன்று ஞாயிறுக்கிழமை கனடா வாழ் கவிஞர் பவானி தர்மகுலசிங்கம் அவர்களது “வியன்களம்” நூல், மற்றும் கொற்றவைப் பாடல்கள் தொகுப்பு இறுவெட்டு அறிமுகவிழா பிரான்ஸ் தலைநகர் பரிஸில் மாலை இடம்பெற்றது.

பேச்சாளர் திரு. அமிர்தநாயகம் சத்தியநாதன் அவர்கள் நிகழ்வைத் தொகுத்து வழங்கச் சுடரேற்றல், அகவணக்கத்தைத் தொடர்ந்து, சிறுமி இமையாவின் தேவாரம், இசை ஆசிரியர் தேவராஜா அவர்களது மாணவிகளின் தமிழ்த்தாய் வாழ்த்து, என்பன இசைக்கப்பட்டுப் பல்கலைகழக மாணவி செல்வி பிரவீனாவின் வரவேற்புரை, மற்றும் நடன ஆசிரியர் அருள்மோகன் முருகையா அவர்களது மாணவிகளின் வரவேற்பு நடனம் போன்றவற்றோடும் ஆரம்பமான விழாவுக்கு, முன்னிலை உரையைத் தமிழ் விரிவுரையாளர் யசோதா தர்மலிங்கம் அவர்களும், அறிமுக உரையை ஊடகவியலாளர் அனுசுயா ஆனந்தரூபன் அவர்களும் வழங்கியிருந்தனர்.

மேலும் நூலுக்கான மதிப்புரையைப் பாட்டரசர் பாரதிதாசன் அவர்கள் சிறப்புற வழங் கியதுடன், தனது கம்பன் கழகப் பெயர் பொறித்த போர்வையுடன், படைப்புக்களையும் நூலாசிரியருக்கு அன்பளிப்பாக அளித்திருந்தார்.

கொற்றவைப் பாடல் தொகுப்பிற்கான நயவுரையைக் கவிஞர் திரு எட்வேர்ட் நிக்ஸன் அவர்க ள் ஆற்றியிருந்தார். மேலும் கவிஞரும் பேச்சாளருமான திரு சின்னராஜா கணேஷ் மற்றும் ஊடகவியலாளர் திரு பாஸ்கரலிங்கம் பார்த்தீபன் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கியிருந்தனர்.

முதன்மைப் பிரதியைச் சாதனா சுப்பர் மார்சேயின் உரிமையாளர் திருமதி பகீரதி செந்தில் நாதன் அவர்கள் ஏற்றிருந்ததோடு, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் தமிழ் தேசியப் பற்றாளர்கள், நூல் ஆர்வலர்கள் எனப் பலரும் வருகை தந்து நூல்களைப் பெற்றிருந்தனர்.

செல்வி சாதனாவின் மேதகு புகழைக் கூறும் நடனம், கவிஞர் பவானியின் போர்க்காலக் கவிதைகளைப் போலவே சிறப்பை த் தந்திருந்தது. புலம்பெயர் நாடுகளில் ஈழத் தமிழர்களது அகதிவாழ்வு ஆரம்பமான கடினமான காலங்களான 1987 களில் இருந்து, போர்க்காலம் வரையான காலத்தின் வாழ்வியலையும், போரின் அறம் மற்றும் வீரத்தைப் பாடுவதாயும் வியன்களம் இருந்ததோடு அந்தக்காலத்தில் துணிச்சலான ஒரு பெண் கவிஞராகவும் திருமதி பவானி இருந்தார் என்பதைகூறிச் சிறப்பித்த அந்தச் சபையில், அவரது கொற்றவை ப் பாடல்கள் தொகுப்பில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாடலுக்கு நடன ஆசிரியர் திருமதி நிஷாந்தி ஆடிய நடனம் விழாவுக்கு மேலும் சிறப்பை தந்திருந்தது.

கவிஞர் பவானி அவர்களது ஏற்புரையோடும், விழா ஏற்பாட்டாளர்களான மிஷன் தமிழ் குழுவினர் சார்பாகத் தமிழ் விரிவுரையாளரான பிரியா லவன் அவர்களது நன்றியுரையோடும் விழா இனிதே நிறைவுற்றிருந்தது.

பாரிஸிலிருந்து
நிலாமகள்.