அவதார், டைட்டானிக் படத் தயாரிப்பாளர் மரணம்
Share
ஜான் லான்டௌ 1960-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி நியூயார்க்கில் பிறந்தார். இவரது பெற்றோர் எலி லான்டௌ – எடி லான்டௌ அமெரிக்க ஃபிலிம் தியேட்டரை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வந்தனர். இவர் பாராமௌன்டுடன் இணைந்து கேம்பஸ் மேன் திரைப்படத்தின் மூலம் 1987 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ஆனார். இதைத் தொடர்ந்து டிஸ்னியுடன் இரண்டு திரைப்படங்களை இணைந்து தயாரித்துள்ளார். இவர் கடைசியாக அவதார் திரைப்படத்தின் அடுத்த பாகங்களை தயாரிப்பதில் மும்முரமாக இருந்தார். அவருக்கு ஜூலி என்ற மனைவியும், ஜேமி மற்றும் ஜோடி என்ற ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 16 மாத போராட்டத்துக்குப் பின் ஜூலை 5-ம் தேதி உயிரிழந்தார். அவரது இறப்பு குறித்து அவதார் பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ள அறிக்கையில், “அவதார் குடும்பம் எங்கள் நண்பரும் தலைவருமான ஜான் லான்டௌவின் இழப்பால் வருந்துகிறது. அவரின் மரபு அவர் தயாரித்த திரைப்படங்கள் மட்டுமல்ல, அவர் கட்டமைத்த அக்கறை, அயராத நுண்ணறிவு, முற்றிலும் தனித்துவமானது” எனக் கூறியுள்ளார்.
ஜான் லான்டௌன் ஜேம்ஸ் கேமரூனுடன் இணைந்து தயாரித்த டைட்டானிக், அவதார் மற்றும் அவதார்: தி வே ஆஃப் தி வாட்டர் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் 2 பில்லியன் டாலருக்கு மேல் வசூலித்த ஒன்றாக உள்ளன. மேலும், ஜான் லான்டௌ தயாரித்த சிறந்த திரைப்படங்கள் கேம்பஸ் மேன் (1987), டைட்டானிக் (1997), சோலாரிஸ் (2002), அவதார் (2009), அலிடா: போர் ஏஞ்சல் (2019),அவதார்: த வே ஆஃப் வாட்டர் (2022) ஆகியவை.