LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா- கந்தர்மடம் ஒன்றியத்தின் வருடாந்த கோடை கால ஒன்றுகூடல் சிறப்பாக நடைபெற்றது

Share

அதிக அங்கத்தவர்களைக் கொண்டு கடந்த பல வருடங்களாக இயங்கிவருகின்ற கனடா- கந்தர்மடம் ஒன்றியத்தின் வருடாந்த கோடை கால ஒன்றுகூடல் அண்மையில் ஸ்காபுறோ தொம்சன் பூங்காவில் (THOMSON PARK) சிறப்பாக நடைபெற்றது.

ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் மற்றும் கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என பலர் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் சகிதம் அங்கு கலந்து கொண்டனர்.

பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் காலை மதிய உணவு பரிமாறல் ஆகியனவும் அங்கு இடம்பெற்றன.

கலந்து கொண்ட அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அன்றைய நாளை அழகிய பூங்கா ஒன்றில் களித்து இல்லம் ஏகினர்.

ஒன்று கூடல் சிறப்பாக நடைபெற ஒன்றியத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.