LOADING

Type to search

இந்திய அரசியல்

கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆளுனர் ரவி ஒப்புதல்

Share

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சுமார் 229 பேர் கடந்த 18-ந்தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். கல்லீரல், சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட கடும் உபாதைகளால் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எதிர்கட்சிகள் இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்திய நிலையில், தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. சிபிசிஐடி காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு சட்டப்பேரைவையில் கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்கும் வகையிலும், அவற்றை விற்பனை செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் வகையிலும், ‘தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா கடந்த மாதம் 29-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரைவையில் மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுனர் ஆர்.என். ரவி ஒப்புதலுக்கு அனுப்பபட்டது. இந்நிலையில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில், கடுமையான தண்டனைகளை விதிப்பதற்கான சட்ட மசோதாவுக்கு ஆளுனர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.