LOADING

Type to search

உலக அரசியல்

இமாசல பிரதேசத்தில் மழை – 15 சாலைகள் மூடல்

Share

இமாசல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகள் நீடித்து வருகின்றன. இதற்கு மத்தியில் சிம்லா பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. பைஜ்நாத் பகுதியில் நேற்று மாலை முதல் 32 மி.மீ. மழை பெய்துள்ளது, அதை தொடர்ந்து தர்மஷாலா (22.6 மி.மீ.), ஜுப்பர்ஹட்டி (21.5 மி.மீ.), மணாலி (20 மி.மீ.), காங்க்ரா (19.2 மி.மீ.), ஜோகிந்தர்நகர் (19 மி.மீ.), சலோனி (18.3 மி.மீ.), பண்டோ (15.5 மி.மீ.) மற்றும் பாலம்பூர் (14.4 மி.மீ.) என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் 15 பிரதான சாலைகள் மூடப்பட்டு இருக்கின்றன. மேலும் 47 டிரான்ஸ்பார்மர்கள் செயலிழந்துள்ளதாக மாநில அவசரகால செய்ல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. வரும் 19ம் தேதி வரை அடுத்த 6 நாட்களுக்கு மாநிலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.