LOADING

Type to search

உலக அரசியல்

நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் தோல்வி

Share

அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறமுடியாமல் போனது. இதனால் சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசண்டா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.

அதன்பிறகு கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்ப பெற்றதையடுத்து, நேபாள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் பிரசண்டா நீடித்தார். தொடர்ந்து ஏற்பட்ட கூட்டணி மாற்றத்தால் பிரதமர் பிரசண்டா 4 முறை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அதில் வெற்றி பெற்றார். இதற்கிடையே, நேபாளத்தில் 5வது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி பிரதமர் பிரசண்டா நாடாளுமன்ற செயலகத்திற்கு கடிதம் எழுதினார். இந்த நிலையில், நேபாள பிரதிநிதிகள் சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பிரதமர் பிரசண்டா தோல்வி அடைந்தார்.