LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் கருங்கண்டல் பாடசாலையின் இலத்திரனியல் வகுப்பறைகளை திறந்து வைத்த சஜித் பிரேமதாச

Share

மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்

(15-07-2024)

எதிர்க்கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ அவர்களின் பிரபஞ்சம் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கருங்கண்டல் பாடசாலைக்கான இலத்திரனியல் மூல வகுப்பறை (SMART CLASS ROOM) கையளிக்கும் நிகழ்ச்சித்திட்டம் 15-07-2024 அன்றைய தினம் திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதனின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட கருங்கண்டல் பாடசாலையில் அமைக்கப்பட்ட குறித்த இலத்திரனியல் மூல வகுப்பறை (SMART CLASS ROOM) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வுடன் இணைந்து மடு வலயக்கல்வி பணிப்பாளர், கருங்கண்டல் பாடசாலை அதிபர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதனின் பிரதிநிதி வசந்த் இணைந்து குறித்த SMART வகுப்பறைகளை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

மேலும் குறித்த பாடசாலைகளின் நூலகங்களுக்கு தேவையான ஒரு தொகுதி ஆங்கில புத்தகங்கள் மேற்படி வழங்கி வைத்ததோடு,புதிய நூல்கள் கொள்வனவு செய்ய தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதியும் சஜித் பிரேமதாசவினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.