LOADING

Type to search

உலக அரசியல்

டிரம்ப்பை ஆதரிக்க மாதம் ரூ.375.80 கோடி நிதி – எலான் மஸ்க்

Share

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு தேர்தல் நிதியாக ரூ.375.80 கோடியை எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கொடுக்க உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடக்கவுள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் (வயது 81), போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 78) களம் காண்கிறார். அதிபர் தேர்தலில், எலான் மஸ்க் நடுநிலை வகிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், சில தினங்களுக்கு முன், டிரம்பை தாமஸ் மாத்யூ குரூக்ஸ் (வயது 20) என்ற நபர் சுட்டார். இதன் பிறகு, தேர்தலில் டிரம்பை ஆதரிப்பதாக எலான் மஸ்க் அறிவித்தார். டிரம்பிற்கு, 4.5 கோடி டாலர் (இந்திய மதிப்பு படி ரூ.375.80 கோடி) தேர்தல் நிதியாக எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கொடுக்க உள்ளார். டிரம்பிற்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் நிதி குறித்து, அமெரிக்க செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ”டிரம்பிற்கு ரூ.375.80 கோடியை எலான் மஸ்க் கொடுக்க உள்ளார்.