LOADING

Type to search

மரண அறிவித்தல்

கண்ணீர் அஞ்சலி | திரு. பாஸ்கரன் கனகசபாபதி

Share

(யாழ்ப்பாணம். சாவகச்சேரி, கனடா ஸ்காபரோ)

அன்புடனும், பாசத்துடனும், பக்தியுடனும் அன்னையின் மன்றத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு, அனைவரினதும் உள்ளத்தையும் கவர்ந்தவராக விளங்கிய சக்தி பாஸ்கரன் அவர்கள் இன்று எம்மைப் பிரிந்து அம்மையின் அடிசேர்ந்தார்.

மனம் சலிக்காமல். முகம் சுழிக்காமல் யார் எது கேட்டாலும் உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட

சக்தி பாஸ்கரன் அவர்களே!

தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே எம்மோடு இணைந்து தொடர்ச்சியாய் அன்னையை வழிபட்டு வந்தோமே! அவள் அருள் பெற்றவராய் மனங்குளிர்ந்து வணங்கி நின்றோமே!

என்ன தவறு செய்தோம் நாம்? தங்களை தங்கள் குடும்பத்திடமிருந்தும் சக்திகளாகிய எம்மிடமிருந்தும் பிரிந்து

எம்மை ஆளாத் துயரினில் ஆழ்த்திய அம்மையிடம் நாம் மீண்டும் மீண்டும் வேண்டி நிற்போம்.
நீங்களில்லா இந்த மண்ணுலகிலகில் தங்கள் துணைவியாரையும் இனிய பிள்ளைகளையும் எவ்வித சிரமங்களும் இல்லாத வாழ்வை அவர்கள் பெற்று தங்கள் தலைமைத்துவத்தில் எவ்வாறு வாழ்ந்தார்களோ? அதையொத்த சிறப்பான வாழ்க்கையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று.

சென்று வாருங்கள் ஐயா!

அன்னாரின் பூதவுடல் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave., Markham ON L3R 5GI) இல் 20-07-2024 சனிக்கிழமைகிழமை மாலை 5:00 மணிமுதல் 9:00 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, மறுநாள் 21-07-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி தொடக்கம் 11.00 வரை கிரியைகள் நடைபெற்று தகனக்கிரியை நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஆதிபராசக்தி குரு மன்ற சக்திகள் (80E நாஸ்டீன் வீதி ஸ்காபரோ )