LOADING

Type to search

உலக அரசியல்

ஃபண்டாங்கோ நிறுவனர் க்லைன் தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது!

Share

ஃபண்டாங்கோ நிறுவனர் க்லைன், தனியார் சொகுசு உணவகம் ஒன்றின் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைச் செய்து கொண்டது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பிரபல திரைப்பட டிக்கெட் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஃபண்டாங்கோ, மிட்-டவுன் மன்ஹாட்டனில் உள்ள சொகுசு உணவகம் ஒன்றின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைச் செய்து கொண்டார். அவர் இந்த தற்கொலை முடிவை எடுப்பதற்கு முன்பாக, “என்னால் வலியை விளக்க முடியாது” என்று உருக்கமான தற்கொலைக் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு இந்த தற்கொலை முடிவை எடுத்துள்ளார். அந்த கடிதத்தில், “மன்னிக்கவும். எப்-ன் வலியை என்னால் இந்த அளவுக்கு விளக்க முடியாது. நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்” என்று ஜே. மைக்கேல் க்லைன் எழுதியிருக்கிறார். 64 வயதான “தொடர் தொழிலதிபர்” மற்றும் ஆறு குழந்தைகளின் தந்தை, லெக்சிங்டன் அவென்யூவிற்கு அருகிலுள்ள கிழக்கு 50வது தெருவில் உள்ள கிம்பர்லி உணவகத்தின் அறை 28ல் தங்கியிருந்த போது இந்த துயரமான முடிவை எடுத்திருக்கிறார். மைக்கேல் க்லைன் தான் தங்கியிருந்த உணவகத்தின் 20வது மாடியில் இருந்து குதித்து மூன்றாவது மாடியின் முற்றத்தில் விழுந்து இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஃபாண்டாங்கோ இணை நிறுவனர் ஜே. மைக்கேல் க்லைன், தி கிம்பர்லி உணவகத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைச் செய்து கொண்டது அவரை அறிந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த துயர முடிவை எடுத்திருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.