LOADING

Type to search

உலக அரசியல்

வங்கதேசத்தில் வன்முறை – 105 பேர் பலி

Share

அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சீர்திருத்தம் தொடர்பான மாணவர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறையில் 105 பேர் உயிரிழந்தனர். 

     வங்கதேசத்தில் அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசின் சுற்றறிக்கையை கடந்த 5ம் தேதி உயர்நீதிமன்றம் சட்டவிரோதம் என்று அறிவித்தது. கடந்த 10-ம் தேதி உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இடஒதுக்கீடு தொடர்பான அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த 16ம் தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறை இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறை காரணமாக 105 பேர் உயிரிழந்தனர், மேலும் 1,500 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். போராட்டங்கள் வலுவடைந்த நிலையில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கதேசத்தில் கல்வி பயிலச் சென்ற 300 இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். வங்கதேசத்தில் உள்ள இந்திய உயர் தூதரகம் மற்றும் துணை தூதரகங்கள் ஆகியவற்றின் உதவியுடன் சாலை மார்க்கமாக 778 மாணவர்களும், விமானங்கள் மூலம் 200 மாணவர்களும் இந்தியா திரும்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை இந்தியாவிற்கு அழைத்து வரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.