LOADING

Type to search

உலக அரசியல்

விமான விபத்து – நேபாளத்தில் மீட்கப்பட்ட கருப்புப் பெட்டி

Share

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் திருபுவன் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை 11 மணியளவில் பைலட், விமான நிலைய ஊழியர்கள் உட்பட்ட 19 பேருடன் தனியார் நிறுவன விமானம் போக்காரா நகருக்கு புறப்பட்டது. அப்போது ஓடுதளத்தில் இருந்து மேல் எழ முயன்றபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுதளத்தை விட்டு வெளியே சென்று விபத்தில் சிக்கியது. ஓடுதளத்தின் மேல் எழுந்த விமானத்தின் ஒரு பக்க இறக்கை ஓடுதளத்தில் உரசிய நிலையில், ஒருசில நொடிகளிலேயே முழுவதுமாக பற்றி எரிந்தது.

சம்பவம் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தால் அந்த இடம் முழுவதுமே கரும்புகையால் சூழ்ந்தது. இதில், விமானத்தில் இருந்த 18 பேர் உயிரிழந்தனர். விமானி ஷக்யா படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு பொது விமானப் போக்குவரத்து அமைப்பின் இணை இயக்குநா் ஹன்ஸா ராஜ் பாண்டே கூறியதாவது, “நேற்று விபத்துக்குள்ளான சிறிய ரக விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அந்த பெட்டி இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திவரும் நிபுணா் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.