மும்பையில் இளம்பெண்ணை வெட்டி கொன்ற காதலன்
Share
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் 20 வயது இளம்பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குற்றத்தில் அவரது காதலனே ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வெட்டி கொலை செய்தது மட்டும் இன்றி ரயில் நிலையம் அருகே உள்ள புதரில் அந்த உடலை புதைத்தாகவும் கூறப்படுகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு கடந்தாண்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், யஷாஸ்ரீ ஷிண்டே என்ற இளம்பெண் கொல்லப்பட்டுள்ளார். 20 வயதான யஷாஸ்ரீ ஊரான் பகுதியில் வசித்து வந்துள்ளார். 25 கிமீ தொலைவில் உள்ள பேலாபூரில் வேலை செய்து வந்திருக்கிறார். இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் (நவி மும்பை) விவேக் பன்சாரே கூறுகையில், “நள்ளிரவு 2 மணியளவில் ஊரான் ரயில் நிலையம் அருகே உள்ள முட்புதரில் இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு அழைப்பு வந்தது.
உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. அவர் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதை இது குறிக்கிறது. எங்களின் முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரம் காரணமாக அந்த பெண் கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது.