LOADING

Type to search

சினிமா

கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் பின்னணி பணிகள்

Share

மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’  படத்தின் படப்பிடிப்பு தற்போது டில்லியில் நடந்து வருகிறது. இதில் கமல்ஹாசன், சிம்பு மற்றும் அபிராமி உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், சிம்பு, அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு டில்லி, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் நடந்த நிலையில் சென்னையில் செட் அமைகப்பட்டு முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டன. அடுத்த கட்டமாக முக்கியக் காட்சிகளுக்காக அயர்லாந்து செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சிம்பு இந்த படத்துக்காக தனது காட்சிகளுக்கான பின்னணினை சில தினங்களுக்கு முன்னர் பேசத் தொடங்கினார். இப்போது கமல்ஹாசன் தனது காட்சிகளுக்கான பின்னணி குரலில் பேசத் தொடங்கியுள்ளார். படப்பிடிப்பிற்கு இடையிலேயே போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளையும் படக்குழு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.