LOADING

Type to search

இந்திய அரசியல்

வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு மத்திய அரசு உதவ ராகுல் வலியுறுத்தல்

Share

கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மீட்பு பணிகளில் மாநில அரசுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் வலியுறுத்தினார்.

     கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தின் 3 பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் பேசியதாவது: வயநாடு நிலச்சரிவு பகுதிகளில் மீட்பு பணிகளில் மாநில அரசுக்கு மத்திய அரசு உதவ வேண்டும். போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றை உடனடியாக மீட்டு மக்களுக்கு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மறு குடியமர்வு திட்டங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

நிலச்சரிவு சம்பவத்திற்கு உடனடியாக நிவாரணத்தொகை விடுவிக்கப்பட வேண்டும். கடந்த சில ஆண்டுகளாகவே நாடு முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படுகிறது. நிலச்சரிவில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து வரைபடம் தயாரிப்பது அவசியம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து விரிவான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ”வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும். மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.