LOADING

Type to search

உலக அரசியல்

வடகொரியாவில் வெள்ளம் – 5,000 பேர் மீட்பு!

Share

வடகொரியாவில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், அப்பகுதிகளில் இருந்து சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவில் அவ்வப்போது கனமழை பெய்வதும், இதனால் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்வது தொடர் கதையாகி வருகிறது.  இந்த சூழலில் சீன எல்லையை ஒட்டிய வட கொரியப் பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனையடுத்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் படகுகள் மூலமாகவும் மக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது மீட்புப் பணிகளில் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டினார். இந்த நிலையில், வெள்ளம் சூழ்ந்த பகதிகளில் இருந்து சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.